தாலிக்கு பின்னாடி இப்படி ஒரு ரகசியம் இருக்கா!
திரைக்கலைஞர் திரு. ராஜேஷ் சார்:
அறிமுகம் :
இப்பொழுது நம்மளுடைய ALP மூர்த்தி அவர்களுடையதுல பிரசன்னா பெரிய பாடகர் அவருடைய அனுபவங்கள் அவர்களுடைய பங்கு இதுல என்ன அப்படிங்கறது பத்தி கேட்போம். வணக்கம். இதுல எப்படி சார் உங்களுக்கு வந்துச்சு.
ALP ஜோதிடர் பாடகர் பிரசன்னா:
வணக்கம். எனக்கு எங்க தாத்தா பேசிக்கலி ஒரு பெரிய ஜோதிடர்.
திரு. ராஜேஷ் சார்:
ஆ! தாத்தா! பேரு?
பாடகர் பிரசன்னா:
நாகராஜ ராவ்னு சொல்லிட்டு. அதுக்கு மேல இன்னொரு ஏழு ஜெனரேஷன் முன்னாடி பாம்பாட்டி ராயன்னு சொல்லுவாங்க. அவங்க எப்படின்னா அந்த ஊர்லையே ஏதாவது பாம்பு கடிச்சிருச்சுனா அவங்க வந்து படுக்க வைப்பாங்க.இவர் பாத்துட்டு திரும்பிட்டு வெல்லம் சாப்பிட்டுட்டு ஜெபம் பண்ணிக்கிட்டே வருவாரு. அவங்களே எந்திரிச்சு போயிருவாங்க. அந்த மாதிரி விஷமுறிவிக்கலாம்.
திரு. ராஜேஷ் சார்:
எந்த ஊரு?
பாடகர் பிரசன்னா:
தாராபுரம் பக்கத்துல சார்.
திரு. ராஜேஷ் சார்:
தெரியும். தாராபுரம் நாகேஷ் சார் ஊரு தானே.
ALP ஜோதிட முறையின் சிறப்பம்சம்:
பாடகர் பிரசன்னா:
எக்ஸாக்ட்லி. அது மட்டும் இல்ல நிறைய சொல்லுவாங்க. இப்படி பண்ணா நிறைய ஏழை குழந்தைகளுக்கு எல்லாம் அவரு ஒன்னும் இல்ல வேஷ்டி கட்டிட்டு அப்படி சாதாரணமா ஒரு குடிசைல இருந்தார். அந்த மாதிரி. எல்லாருக்கும் கையில இப்படி பண்ணாலே எல்லாமே வரும். அவருக்கு அந்த மாதிரி சித்தர் மாதிரி ஒரு இது. அந்த வழியில் வந்ததுனால எனக்கு சின்ன எப்பவுமே உள்ளுக்குள்ள ஒரு ஏக்கம் தாகம் இருந்துட்டே இருந்தது.
அண்ட் சடனா எனக்கு கத்துக்கணும். ஏன் கத்துக்கலாமே ஒரு நல்ல கலையாச்சே ஆனா கரெக்டான ஒரு மாஸ்டர் கிடைக்கணும் அப்படின்னுதோணுச்சு.அப்போ பொதுவுடைமூர்த்தி சாரோட ALP அப்படின்னு ஒரு விஷயம் பார்த்து. ALP அப்படின்னா லக்னமே மாறுது. அடுத்தது ‘வளருது’ அப்படின்னு ஒரு டாப்பிக் சொல்லும்போது ரொம்ப ஆச்சரியமா இருந்தது.
எப்படி இது? என்ன புதுசா இருக்கே? அப்படின்னு சாந்திதேவி மேடம் கிட்ட போன் பண்ணி கேட்டேன். அவங்க வந்து சொல்லும்போது எனக்கு அப்பவே உடனே ஜாயின் பண்ணும் போல ஆசையா இருந்தது. அப்புறம் ஒவ்வொரு ஸ்டெப்பா சொல்லும்போது எனக்கு பேசிக்கலி சார் நம்ம ஒருத்தர போய் பார்க்கிறோம். ஒரு பிரச்சினைக்காக பார்க்கும்போது அவங்க என்ன பண்றாங்கன்னா, நீங்க 3 வது கிளாஸ் படிக்கும் போது உங்களுக்கு ஒரு கட்டி இருந்திருக்குமே அதுக்கப்புறம் சரியா ஆயிருக்குமே. அதுக்கப்புறம் 5 கிளாஸ் வரும்போது இந்த வயசுல இப்படி ஆகிருக்கும், அப்படி ஆகிருக்கும்.
ஊர்ல உன் சொந்தத்தில் யாராவது போயிருப்பாங்களே அப்படின்னா எங்க யோச்சு எப்ப யாரை போய் யோசிக்கிறதுன்னே தெரியாது. அப்புறம் இல்ல சார் அப்படின்னா இல்ல நல்ல யோசிச்சு பாருங்கன்னு ஏதோ லிங்க் பண்ணி அவங்க சம்பந்தி ஓட சம்பந்தி ஓட அப்படி இப்படி சொந்தம் சொந்தம்னு அவங்க போயிருக்காங்களா? கரெக்டா அப்படி எல்லாம் பேசுவாங்க.
சோ, அதெல்லாம் பேசி முடிச்சுட்டு. இப்போ என்ன கேள்வி நான் கேட்க வந்து இருக்கேன் அப்படின்னா அப்படிங்கறதுக்குள்ள அவங்களுக்கு டயர்டு ஆயிடும். இவ்ளோ நேரம் பேசிட்டு பழைய கதை எல்லாம், நான் கரெக்டா சொன்னனா அப்படின்னு கேட்பாங்க. ஆமா சார் கரெக்டா தான் சொன்னீங்கன்னு தான் சொல்லி ஆகணும். எல்லாம் முடிச்சுட்டு இப்போ ஒரு கேள்வி கேட்கலாம் அதுல ஒரு 10 கேள்வி டவுட்ஸ் இருக்கு இப்படி பண்ணலாமா அப்படி பண்ணலாமா அப்படிங்கும் போது அவங்களுக்கு டயர்டு ஆயிடும். சொல்ல முடியாது டக்கு டக்குனு சொல்லிட்டு போயிடுவாங்க. சோ திருப்தியே கிடைக்காது.
அப்படி இருக்கும் போது இவங்க கிட்ட பேசும்போது இவங்க ALP யோட சிஸ்டம் என்னன்னா ரொம்ப அற்புதமான சிஸ்டம். வந்த உடனே உங்க கேள்வி என்ன பர்ஸ்ட் உங்க கேள்வி என்ன? அந்த கேள்விக்கு இதான் பதில் வித்தின் செகண்ட்ஸ்ல சொல்றாங்க.
அதாவது ஃபார் எக்ஸாம்பிள் அதுக்கு ஒரு அனுபவம். எனக்கு ஒரு பைவ் மந்த்ஸ் பேக் அட்மிட் ஆயிருந்தேன் ஹாஸ்பிடல்ல. அப்ப வந்து ரொம்ப ஒரு வீக்கான சூழ்நிலை ரொம்ப பயந்துட்டேன் நான். ALPல சாந்திதேவி மேம்க்கு போன் பண்ணேன். இதுல இன்னொன்னு யாருக்கு போன் பண்ணாலும் உடனே உடனே ஒரு ஃபர்ஸ்ட் எயிட் மாதிரி இம்மிடியேட்டா பேசுவாங்க. நல்லா பேசுவாங்க. எக்ஸ்பிளைன் பண்ணுவாங்க. மேடம் இந்த மாதிரி இருக்கு எப்படி என்ன அப்படின்னு போது டக்கு டக்கு டக்குனு பாத்துட்டு கிளாஸ் ஜாயின் பண்ண டைம், பாத்துட்டு இந்த பைவ் டேஸ் உங்களுக்கு இப்படித்தான் டைம் சரியில்ல. கரெக்டா வெள்ளிக்கிழமை மாலை 7:00 மணிக்கு நீங்க வந்துருவீங்க.
திரு. ராஜேஷ் சார்:
எவ்வளவு நாள்ல?
பாடகர் பிரசன்னா:
ஒரு 5 நாள்.
திரு. ராஜேஷ் சார்:
5 நாளா ?
பாடகர் பிரசன்னா:
5 நாள் அட்மிட் ஆயிருப்பீங்க. டைம் சரியில்ல. அஞ்சு நாள்ல 7:00 மணிக்கு வெளியே வந்துருவீங்க.
திரு. ராஜேஷ் சார்:
அப்ப நீங்க ஹாஸ்பிடல்ல இருக்கீங்க.
பாடகர் பிரசன்னா:
ஆமா. கரெக்டா இருக்கேன். அப்ப வந்துருவமா மேடம். திரும்பி வந்துருவனா. கண்டிப்பா வந்துருவீங்க தைரியமா இருங்க அப்படின்னு. அப்புறம் நான் மறந்துட்டேன் அப்புறம் எனக்கு இருக்கிற ட்ரிப்ஸ் ஏத்துறது அது, இதுன்னு போயிட்டே இருக்கு.
ஆனா எல்லாம் முடிச்சுட்டு வெளிய வந்து, வீல்சேரில வெளில வர்ரேன் ஐசியூல இருந்து வெளிய வாரேன். நான் சும்மா ஏதோ டைம் பாக்க போனா கரெக்டா 7:00 மணி சார்.
ராகவேந்திரர் ரோட பக்தன் அப்படியே கண்ணுல தண்ணி வந்துருச்சு எனக்கு. ஆஹா என்னடா இது என்ன சிஸ்டமே ஒன்னும் புரியலையே. கரெக்டா அப்படியே சொல்லிட்டாங்களே. அந்த வார்டுல இருந்து இருந்து வெளியே வந்துட்டேன் அவ்வளவுதான்.
அதுக்கப்புறம் அப்படியே நார்மல் ஆகி. அப்புறம் ரன்னிங் ல போறது எல்லாம் நார்மல் ஆயிட்டேன் ரொம்ப. எதுக்கு சொல்றேன்னா இவ்வளவு துல்லியமா சொல்ல முடியுமா? எப்படி முடியும் அப்படின்னு ஆசை. கத்துக்கணும்டிர ஆர்வம். இதை விடவே கூடாதுன்னு. காலைல 4:30 மணிக்கு கிளாஸ். அது ஒரு அற்புதமான விஷயம்.
திரு. ராஜேஷ் சார்:
அதான் எனக்கு ஒண்ணுமே புரியல. இது இந்த சாமி கும்பிடுகிற மாதிரி பிரம்ம முகூர்த்தம்னு.
பாடகர் பிரசன்னா:
நான் என்ன நினைச்சேன் சார், 4:30 மணிக்கு ஒரு ஏழு எட்டு பேர் வருவாங்க. சரி நம்ம கொஞ்சம் கேள்வி எல்லாம் கேட்கலாம். பிரஷ்ஷா எந்திரிச்சு சீக்கிரம் கரெக்டா இருக்கும் அப்படின்னு. அங்க பாத்தா 150 பேர் 175 பேரு 180 பேர் காலைல 4:15 மணிக்கு வந்திருக்காங்க எல்லாம். என்னடா இவ்வளவு ஆசையா உட்கார்ந்திருக்காங்களேன்னா? காரணம் அந்த ஏஎல்பி என்கிற வளரும் லக்னம் அப்படிங்கற கான்செப்ட் தான்.
என்னன்னா சார் இது சிம்பிளா சொல்லனும்னா, ஒருத்தன் துப்பாக்கி வச்சுட்டு நிக்கிறான். ஒருத்தன் அங்க ஒரு ஆள் இருக்கான்னு கண்டுபிடிச்சாச்சு. அவன சுடுறாங்க ஆனா படல. என்ன காரணம்னா பின்னாடி வந்து ஃபுல்லா இரும்பு ஷீல்ட் வச்சிருக்கான். இங்க இருந்து அவனுக்கு அவ்வளவு தான் தெரியுது. இப்போ இப்படியே வந்து திரும்பி அங்க போய் நின்னேன்னு வெச்சுக்கோங்க அவன் உடம்பு தெரியுது ஒரே சூட் செத்துருவான்.
நம்ம வந்து ஜென்ம லக்னமே பார்க்கும் போது அங்க என்னமோ சரியில்லையே. அங்க என்னமோ சொல்றது நடக்க மாட்டேங்குது. எங்க போய் கேட்டாலும் சொல்றாங்க நடக்கல. இவங்க எப்படின்னா கரெக்டா குறி வைக்கிறாங்க. அதாவது லக்னம் வந்து இப்பனா இந்த லக்னம் தான் உனக்கு இருக்கணும் சொல்லி. அதை ALP லக்னம்னு சொல்லி அங்க இருந்து கரெக்டா கணிக்கும் போது அற்புதமான ரிசல்ட்.
வித்தின் செகண்ட்ஸ்ல சொல்றாங்க. அது மட்டுமல்ல சொன்னது அவ்வளவு துல்லியமா நடக்குது.
திரு. ராஜேஷ் சார்:
கால்குலேட்டர்ல போடுற மாதிரி சொல்றீங்க.
பாடகர் பிரசன்னா:
சார் சிம்பிள் சார். காரணம் வந்து ரொம்ப ரொம்ப சிம்பிள். ஃபார் எக்ஸாம்பிள் பார்த்தீங்கன்னா, ஈரோட்டில் ஒருத்தர் செகண்ட் மேரேஜ் ஆகுமா சார் அப்படின்னு கேட்டாங்க. டைவர்ஸ் ஆயிடுச்சு.
திரு. ராஜேஷ் சார்:
எந்த வயசு அவருக்கு?
பாடகர் பிரசன்னா:
அவருக்கு 32 அது மாதிரி தான்.
திரு. ராஜேஷ் சார்:
அது பாவம் முதல் மேரேஜ் மாதிரி தான் தெரியுது.
பாடகர் பிரசன்னா:
எக்ஸாக்ட்லி எக்ஸாக்ட்லி. அப்போ அவங்க சொந்தத்துல பாவம் என்னவோ பிரச்சனை. கொஞ்சம் பார்த்து சொல்லுங்க அப்படின்னு எங்க சித்தப்பா ரகுவத்மன்னு சொல்லிட்டு பணத்தை முதலில் அனுப்பிச்சுட்டாரு. ஃபர்ஸ்ட் பேமெண்ட் அவர்தான் கொடுத்தார். சந்தோஷமா இருந்துச்சு. சரி இது எப்படியாவது பார்க்கலாமே அப்படின்னு பாத்துட்டு கரெக்டா அதுக்கு சொன்னேன் சார்.
திருவாதிரை அப்படின்னா ராகு. ராகுன்னா கண்டிப்பா இன்டர் காஸ்ட் இன்டர் லாங்குவேஜ். மூர்த்தி சார் சொல்லி கொடுத்தது தான். நம்ம ஒன்னும் புதுசா கண்டுபிடிக்கல.
திரு. ராஜேஷ் சார்:
ராகுல் இஸ்லாமியராருக்கும்.
பாடகர் பிரசன்னா:
இஸ்லாமியர் எக்ஸாக்ட்லி ராகு. அப்படியெல்லாம் பார்த்து சொன்னதுல, என்னமோ சொல்றப்ப சரி பார்க்கலாம் அப்படின்னு விட்டாங்க. மே-ஜூன் குள்ள கண்டிப்பா நடக்கும் தெரியுது இதுல. கரெக்டா நாலஞ்சு நாளைக்கு முன்னாடி நைட் 11:30 மணிக்கு போன் பண்ணி என்னடா இது? உன்னை எல்லாம் சாதாரணமா நினைச்சுட்டு இருந்தேன். நீ பாட்டு தான பாடுவ. கர்நாடக சங்கீத கச்சேரி பண்ணுவ சினிமா பாட்டு பாடுவ உனக்கு எப்படி?
அடுத்த போன் வந்து ஜோதிட சக்கரவர்த்தி திரு. பிரசன்னா இருக்காங்களான்னு கிண்டல் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. அப்புறம் அப்படியே நிறைய பேருக்கு நியூஸ் போய், நிறைய பேர் கேட்க ஆரம்பிச்சுட்டாங்க.
திரு. ராஜேஷ் சார்:
கிண்டலே பெரிய உண்மையாய் போயிடும். ஆமாம். பெரிய விஷயம் சார் அது.
பாடகர் பிரசன்னா:
அதே மாதிரி அவங்களுக்கு நிச்சயதார்த்தமும் ஆயிடுச்சு. இது வந்து ALP க்கு நான் ஒரு பெரிய டெடிகேஷன் சமர்ப்பணமா வச்சிக்கிறேன். அது மாதிரி நிறைய ஒன்னு ரெண்டு கிடையாது சார் நிறைய இன்சிடென்ஸ். அதுல வந்து சொல்றது அப்படியே நடக்குது சார்.
இது வந்து என்னன்னா இதுல வந்து எந்த அளவுக்கு லைஃப்ல ரொம்ப முக்கியமா நான் பீல் பண்றேன் அப்படின்னா, சிம்பிளா சொல்றேன் சார். இந்த சயின்டிபிக்கா பேசுறவங்க இது என்னையா ஜோசியம் நீ எல்லாம் வந்து சும்மா ஏமாத்துற வேலை பேசிட்டு இருக்கிறவங்களுக்கு. அவங்களுக்கு நான் பேசிக்கா ஒன்னு சொல்லிக்க ஆசைப்படுறேன். உங்க ஜாதகத்தைப் பார்க்கும் போது உங்களுக்கான டைம் இப்ப நல்லா இருக்கு. அடுத்த வருஷத்துல இருந்து ரெண்டு வருஷம் நல்லா இல்ல பாதம் போகும் போது நல்லா சரி இல்லனு வச்சுக்கோங்களேன்.
சிம்பிளா மினிமம் என்ன சொல்லலாம்? சார் ஒரு இன்சூரன்ஸ் போட்டு வச்சுக்கோங்க. அதுல நீங்க போட்டுக்கலாம். சில பேர் போடாமலே இருக்காங்க.
அத நீங்க கொஞ்சம் போட்டு வச்சுக்கோங்க அப்படிங்கும் போது கண்டிப்பா அவங்களுக்கு பிளஸ் தான். அவங்களுக்கு ஒன்னும் ஆகக் கூடாது. ஆனா, அவங்களுக்கு ரெடியா இருக்கு அட்லீஸ்ட் இந்த அளவுக்கு. பெருசா ஒன்னும் பண்ண போறது இல்ல.
அதே மாதிரி ஒரு ஜாதகக்காரங்க கேட்கும் போது இந்த பொண்ணு படிச்சு முடிச்சிடுச்சு. கல்யாணம் பண்ணிக்கலாமா, மேல்படிப்பு படிக்கலாமா?
இப்போ கரெக்டா கல்யாணம்னா டைவர்ஸ்னு வருது. எட்டாம் இடம் காமிக்குது. இந்த பிரச்சனை எல்லாம் காமிக்குது. ஆனா படிப்பு வந்து ரெண்டு. ரெண்டுக்கு பார்த்திங்கன்னா சூப்பரா இருக்கு. 11க்கு நல்லா அருமையா இருக்கு. அப்ப பார்த்தீங்கன்னா இந்த அதிபதி ரொம்ப நல்லா 11 ல உட்காரும்போது நல்லா இருக்கு இப்போ நீங்க படிச்சிருங்க. கல்யாணம் பண்ணாதீங்க அப்படின்னு சொல்லும்போது அவங்க லைப்பே பெரிய விஷயங்களா மாறுது. இங்கதான் மாற்றம் அப்படிங்கறது.
ALP ஜோதிடம் - வழிகாட்டும் கலை :
திரு. ராஜேஷ் சார்:
நல்லா இருக்கு நல்லா இருக்கு.
பாடகர் பிரசன்னா:
மாற்றம்னா புதுசா மாத்த முடியாது. ஆனா அவங்களுக்கு இத கைடு பண்ணும் போது அது மாறி நடந்ததுன்னா டைவர்ஸ் ஆயிடும் படிக்கவும் முடியாது. அந்த சோகத்துலே வாழ்க்கை போயிரும். இந்த வகையில பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்களுக்கு, நான் வாழ்க்கையில என்னைக்குமே நான் வந்து பெரிய அருமையான குரு கிடைச்சாரு. இந்த மாதிரி வழிகாட்ட இன்னைக்கு யாருக்குமே ஆள் கிடைக்கல சார். அதுக்கு கொடுத்து வச்சிருக்கணும். கர்மாங்கிறது சார் அனுபவிக்க தான் பிறந்து இருக்கோம். அது அனுபவிக்காம தப்பிக்க முடியாது. ஆனா இப்படி பண்ணி அது கொஞ்சம் கரெக்ட் பண்ணிக்கலாம். கரெக்ட் பண்ணி லைஃப் நல்லா அழகா கொண்டு போகலாம் இதுல எல்லாம்.
இந்த மாதிரி சில விஷயங்கள, இவ்ளோ சீக்கிரமா நான் கத்துக்கிட்டது வந்து ரொம்ப ஆச்சரியம். நான் கிளாசுக்கு வந்து 15வது நாள் பிரிடிக்ட் பண்ணேன் சார். 15வது நாள் நான் வந்து சொன்னேன் அவங்கலாம் நம்பவே இல்ல. ஆனா எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்துச்சு. இன்னும் நான் இது மாதிரி ஏழு, எட்டு சம்பவங்கள் இருக்கு. அது ரொம்ப டீடைல்டா சொல்லணும். எதுக்கு சொல்ல வரேன்னா இந்த மாதிரி ஒரு கலை இது கலைங்கிறது எதுக்கு கத்துக்கணும்? கேட்டீங்கன்னா எதுக்கு கத்துக்கணும்னா எந்த கலையும் கத்துக்கணும்னு அவசியமே கிடையாது. ஆனால் இது அற்புதமான கலை.
இதனால நம்ம ஃபேமிலி நம்மளுடைய குழந்தைகள், நம்ம பேர குழந்தைங்க சொந்தக்காரங்க, நண்பர்கள் எல்லாம் சரியான விதத்துல வழி காட்ட முடியும் ஒன்னு. இன்னொன்னு எதுக்குன்னு கேட்டீங்கன்னா அது நீங்க கத்து பார்த்தால் தான் தெரியும். அது ரொம்ப அருமையான ஒரு இன்ட்ரஸ்டிங்கான சப்ஜெக்ட் அது.
திரு. ராஜேஷ் சார்:
நீங்க சொல்லும் போதே தெரியுது.
பாடகர் பிரசன்னா:
ரொம்ப கால்குலேஷனே கிடையாது. அதுதான் மெயின் இதுல. கால்குலேஷன் போட்டு முதல்ல எல்லாம் போட்டு அது இதுன்னு.
திரு.ராஜேஷ் சார்:
மண்டைய கொடஞ்சுரும் சார். செஸ் விளையாடுற மாதிரி இருக்கும். தலைவலிக்கும். மூணு ஜாதகத்துக்கு மேல பார்க்க முடியாது. அது எப்படி 10, 15 ஜாதகம் 50 ஜாதகம் எல்லாம் பாக்குறாங்கன்னு எனக்கு தெரியவே இல்லை.
பாடகர் பிரசன்னா:
மூர்த்தி சார் கிட்ட இன்னைக்கு நீங்க வந்து 50 ஜாதகம் கொடுத்தீங்கன்னா செகண்ட்ஸ்ல டக்கு டக்கு டக்குனு முடிச்சு தூக்கி போட்டுருவாரு. அது மூர்த்தி சார் மட்டும் இல்ல. சாந்திதேவி மேடமா இருக்கட்டும், சத்திய நாராயணன் சாரா இருக்கட்டும். எல்லாருமே ஒரே மாதிரி. இதுல நான் குரு நான் வந்து ஸ்டுடென்ட் எல்லாம் கிடையாது. எல்லாரும் ஒரே ஸ்டைல் அப்படி அடிப்பாங்க.
அதே மாதிரி எல்லாரும் நல்லா வரணும் அப்படிங்கற எண்ணம். டோட்டல் பாசிட்டிவிட்டி சார். ALP அப்படின்னா டோட்டல் பாசிட்டிவிட்டி. நான் வந்து கத்து கொடுக்க மாட்டேன். உனக்கு எங்க கத்துருவியோ அப்படின்னு அதெல்லாம் கிடையவே கிடையாது. என்ன தெரியுதோ, உடனே டக்கு டக்குனு சொல்லிடுவாரு.
திரு. ராஜேஷ் சார்:
அவர்தான் புக்கு போட்டுறாரு, சாஃப்ட்வேர் குடுத்துறாரு, நீங்களே கத்துக்கோங்க சொல்றாரு எல்லாமே செய்றார்.
பாடகர் பிரசன்னா:
சார் சாப்ட்வேர் வச்சிக்கிட்டு நமக்கு பாக்குறதுக்கு ஒரு விஷயம் தெரியும். இப்ப என்னன்னா அவங்க சொல்லிக் கொடுக்கிற மெத்தட் கரெக்டா ஃபாலோ பண்ணிட்டோம்னா சாப்ட்வேரே தெரிய வேண்டியதில்லை. சாப்ட்வேர் இல்லாமலே அழகா நம்ம சொல்லிடலாம்.
ரொம்ப அற்புதமான ஒரு கலை. இந்த கலையை இவ்ளோ ஈசியா எளிமையா எல்லாருக்குமே கிடைக்கிறதுக்கான ஆண்டவன் அனுகிரகம் பண்ணி இருக்கான். அதை நிறைய பேர் கத்துக்கணும். நிறைய பேர் இதை பார்த்தீங்கன்னா, உள்ள வந்தா அடிக்ஷன் அவ்வளவுதான். உள்ள வந்துட்டா அடிக்ட்.
நிறைய சின்ன பசங்க வரணும். இன்னும் சொல்லப்போனா இது ஸ்கூல், காலேஜ்ல ஒரு பாடமா ஒரு சின்னதா வாரத்துக்கு ஒரு பிஈடி பீரியட் வைக்கிறோம்ல அந்த மாதிரி வச்சிட்டு இது ஒரு சயின்ஸ் ஆக்சுவலா. இது என்ன அப்படின்னு பார்க்கிறதுனால தப்பே கிடையாது. நல்ல கலை.
திரு. ராஜேஷ் சார்:
இது பெரிய ஒரு எல்லாரும் வேற நமக்கு ரொம்ப மரியாதை குடுப்பாங்க.
பாடகர் பிரசன்னா:
எக்ஸாக்ட்லி. எக்ஸாக்ட்லி.
திரு. ராஜேஷ் சார்:
ஆயக்கலைகள் 64 ல இரண்டாவதோ மூன்றாவதோ கலை இது ஜோதிடக்கலை. ஆயக்கலைகள் 64 இருக்குல அதுல நாலு அஞ்சுகுள்ள வருதுன்னு நினைக்கிறேன். இசை கலை, நாட்டிய கலை இந்த மாதிரி இது பெரிய கலை.
பாடகர் பிரசன்னா:
நீங்களும் ஜோதிடர் என்று கேள்விப்பட்டு இருக்கேன்.
தாலிக்கு பின் இருக்கும் ரகசியம் :
திரு. ராஜேஷ் சார்:
கொஞ்சம் அப்படியே சும்மா சும்மா. அதும் இது பயங்கரம். நான் 40 வருஷம். சும்மா காலம்தான் 40 வருஷம் நான் படிச்சது ஒரு நாலஞ்சு வருஷம் தான் சார். அதுக்கு மேல நான் படிக்கல. நான் 35 வயசுல தான் படிக்க ஆரம்பிச்சேன். 34-35 ல, 40 லே விட்டுட்டேன். எனக்கு பிடிக்கல. இதுல ஒரு பெரிய விஷயம் ஒன்னு இருக்கு. அது என்னன்னா ஒரு மாதிரி ஒரு அருள் மாதிரி ஒன்னு கிடைக்கும். இப்படி பார்த்த உடனே டக்குனு அடிச்சிடுவான். இந்த ஆள் இருக்க மாட்டான். இந்த ஆள் உடனே வேலை கிடைக்கும் இவனுக்கு உடனே கல்யாணம் நடக்கும்.
மிகப்பெரிய ஜோதிடர் வெங்கட்ராம ஐயர். அவ்ளோ பெரிய ஆள். தன் மகளுக்கு கல்யாணம் ஆகல அவர் என்கிட்ட கொடுத்தார். நான் தற்செயலா இப்படி பார்த்துட்டு டிசம்பர் குள்ள கல்யாணம் நடக்கும்னு நினைச்சேன் நவம்பர்லயே கல்யாணம் ஆயிடுச்சு.
அது என்னன்னா அந்த ஒரு காலகட்டத்துல எனக்கு பாத்த உடனே சொல்ற மாதிரி இருந்துச்சு. இப்ப பெருமையா நினைப்பாங்க தற்பெருமை இல்லை அது. அப்புறம் நான் கொஞ்ச நாள்ல அத விட்டுட்டேன். ஏன்னா எனக்கு பல சோதனைகள் வந்ததும், இது எதுக்கு தேவை இல்லை. நம்மளும் சம்பாதிக்க போறதில்லை. அப்புறம் தெரிஞ்சவங்களாம் வந்தாங்க.
இன்னொன்னு நான் வெங்கட்ராமையர் பார்த்தசாரதி இப்படி பெரிய பெரிய குருக்கள் எல்லாம் எனக்கு இருந்தாங்க அப்ப. 83-84 ல அப்போ லேண்ட்லைன் இருந்துச்சு. உடனே போன் பண்ணி கேட்பேன். நாலஞ்சு பேர்ட்ட கேட்டு ஒரு பலனை சொல்லுவேன். எல்லாரும் நான் பெரிய ஜோசியர்னு நினைச்சு என்கிட்ட கேட்க ஆரம்பிச்சிட்டாங்க. அதுல நம்ம உண்மைய சொன்னோம் பாத்தீங்களா அதுல மூணு நாலு பேர் என்கிட்ட பேசவே இல்ல. பேச்சுவார்த்தையே இல்லாம ஆக்கிட்டாங்க இன்னைக்கு வரைக்கும். சில பேர் இறந்தும் போய்ட்டாங்க. ஏன்னா அவங்க பர்சனலா தோத்துட்டாங்களா தோத்த பிறகு தான் என்கிட்ட வரணும் தெரியுமா? நான் சொன்னது கரெக்ட்டா நடந்துச்சுன்னு வரலை. அதோட விரோதம் ஆயிட்டாங்க. சினிமால தான் மெயினா சினிமா அரசியல் இதுல எல்லாம். அவங்களுக்கு பிடிக்கல. எல்லாருமே அரசியல்ல ஒவ்வொரு எலக்சன்லயும் ஜெயிக்கணும் சொல்லணும் ஒவ்வொரு படமும் ஓடணும்னு சொல்லணும். அது எப்படி சொல்ல முடியும்?
அப்புறம் ஒரு காலகட்டத்துல நான் பார்த்ததும் சொல்ல ஆரம்பிச்சுட்டேன். கல்யாணம் காட்சிகளுக்கு போய் அப்படி பொண்ணு மாப்பிள்ளைகளைப் பார்த்த உடனே என்னது சரியில்லையே, இந்த இது ஆசாரிகள் வந்து தாலி பூட்டும் போது சொல்லிடுவாங்க.
பாடகர் பிரசன்னா:
ஓ !அப்படியா?
திரு. ராஜேஷ் சார்:
ஆமாங்க. அந்த காலத்துல இருந்துச்சுங்க. தாலி செய்றதே பெரிய கலைங்க. தாலி வந்து ஒரு வீட்டில போய் பொண்ணு பாக்க போறாங்கன்னா அந்த நாத்தனர்கள் இருக்காங்கல மாப்பிள்ளையோட அக்கா தங்கச்சிகள். அவங்க தான் போயி அந்த காசு எல்லாம் அவங்க போடுவாங்க. ஷேர் பண்ணுவாங்க.
போய் கொடுத்து எங்க அப்பாவோட வீடு நல்லா வாழனும் அப்படின்னு சொல்லி சாமி கும்பிட்டு. அவங்க போய் இந்த பணத்தை கொடுத்து, அந்த தாலி பூட்டும் போது கண்டுபிடிச்சுடுவாங்க சார். இது ஒரு மகாமகம், ரெண்டு மகாமகம், நாலு மகாமகம். இது ஒரு ரவுண்ட் சரி ரெண்டு ரவுண்ட் சரி. ஆமாம். இது ஒரு மகாமகத்துக்குள்ள போயிடும். இது நாலு மகாமகம் தாங்கும் அப்படின்னு அவங்க கண்டுபிடிச்சுடுவாங்க.
தாலிய பூஜை பண்ணி அவங்க கிட்ட குடுத்து. அந்த நாத்தனார்கள் அந்த தாலியை வாங்குவாங்க. இப்படி ஒரு புனிதமானது இருக்க போய் மிஷின் வந்ததும் இப்போ போய் கடையில போய் தாலி வாங்கி. நாளை கல்யாணத்துக்கு முதல் நாள் நைட் வாங்குறாங்க. இப்ப என்ன ஆகும் பாருங்க.
பாடகர் பிரசன்னா:
அதை எடுத்து மாட்டி வைத்து விடுறாங்க ஆணில.
திரு. ராஜேஷ் சார்:
இது வேற. ஆமா. அப்புறம் குளிக்க போகும் போது வேற மாட்டி வைத்து வச்சிராங்க. அப்புறம் எனக்கு வந்து இத பார்த்த உடனே சொல்லக்கூடிய அளவுக்கு வந்தது சார். ஒரு கப்பில்ல பார்த்த உடனே இவங்க ரொம்ப அருமையா வாழ்வாங்கலாம். எனக்கு ஒரு கலை இருந்துச்சு எனக்கு. அப்புறம் அத மறந்துட்டேன். அப்படியே விட்டுட்டேன். இப்போ அது லேசா எனக்கு கொஞ்சம்வர்ற மாதிரி இருக்கு. ஜோதிடத்தில் இல்லை ஆள பார்த்த உடனே கணிக்கிற மாதிரியானது.
எனக்கு சுஜாதா சார் சொன்னாரு. நீங்க அதை வந்து டெவலப் பண்ணுங்கன்னாரு. எனக்கு முடியல. பிடிக்கல எனக்கு. இன்னொருத்தரை என்ன நாம போய் கணிக்கிறதுன்னு. விட்டுட்டேன். இப்ப நீங்க நல்லா தெரிஞ்சுகிட்டீங்க எவ்வளவு நல்ல தெரிஞ்சுகிட்டீங்க.
பாடகர் பிரசன்னா:
நான் வந்து ஃபர்ஸ்ட் ஒரு ஒன் மந்த்ல. ஃபர்ஸ்ட் பேசிக் கோர்ஸ் பண்ணும் போதே சார். ஒரு தைரியம் வந்துருச்சு. அதுக்கு அடுத்து அட்வான்ஸ் கோர்ஸ் போணுமா என்னால முடியுமா அப்படிங்கற பயம் வந்தது. அப்புறம் ரொம்ப வந்து அதுவும் அழகா, காரணம் வந்து டீச்சர்ஸ் வந்து அவ்வளவு அற்புதம் சார். எப்ப வேணா 12 மணி, 10 மணிக்கு, நைட் கூப்பிட்டாலும் அவ்வளவு பொறுமையா சொல்லிக் தருவாங்க. காலைல 4:00 மணிக்கு கூப்பிட்டாலும் சொல்லுவாங்க.
நல்லா கத்துக் கொடுத்ததனால நமக்கு அட்வான்ஸ் கோர்ஸ் ஈசியா இருந்தது. இப்போ டெய்லி நம்ம ஒரு நாலு ஜாதகம் அஞ்சு ஜாதகம் பார்த்துட்டே இருக்கோம். இது ஒரு சின்ன பிராக்டீஸ். நீங்க சொன்ன மாதிரி.
திரு. ராஜேஷ் சார்:
ப்ராக்டிஸ். டெய்லி ப்ராக்டிஸ்னு நாம எவ்வளவு படிக்கிறோமோ அதை பிராக்டிஸ் பண்ணி பார்த்தா தான் நமக்கு அனுபவம் வரும். நாம விற்பனர் ஆவோம். இந்த பாட்டு எப்படி சார் உங்களுக்கு? சின்ன பிள்ளைல இருந்தே பாட்டா?
பாடகர் பிரசன்னா:
என் அப்பாவோட சைடுல அஸ்ட்ரோலஜர். என் அம்மாவோட சைடுல வயலினிஸ்ட். செம்பை அரியக்குடி எம்.எஸ் சுப்புலட்சுமி அம்மா எல்லாருக்கும் வாசி இருக்காங்க எம். எஸ் அம்மா வீட்டுக்கு போயிட்டு மரியாதை பண்ணிட்டு கூப்பிடுவாங்க. எங்க தாத்தா வயலின் வாசிக்கிறது.
திரு. ராஜேஷ் சார்:
என்ன சார்?
எம். எஸ். வருவார்களா?
பாடகர் பிரசன்னா:
எம். எஸ். சுப்புலட்சுமி அம்மா.
திரு. ராஜேஷ் சார்:
ஆச்சரியமா இருக்கே.
பாடகர் பிரசன்னா:
வைத்தியநாத பாகவதர், செம்மங்குடி எல்லாருமே அவ்வளவு குளோஸ். கோயம்புத்தூர் நாங்க. அந்த வயலின் நானும் வச்சிருக்கேன். இன்னும் அதுல வாசிச்சிட்டு இருக்கேன். 370 வருஷம் வயலில் ஜெர்மன் வயலின் சார் அது.
திரு. ராஜேஷ் சார்:
எத்தனை வருஷம்?
பாடகர் பிரசன்னா:
370 வருஷம். பெரிய பொக்கிஷம் சார். அது மாதிரி இன்னும் தாத்தா பழம் சஞ்சரம் என்று சொல்லிட்டு திருவையாறு பஞ்சரத்து கீர்த்தனை அது ஆரம்பிச்சவங்க. அதை ஆரம்பிச்சதுல அவர் ஒருத்தர் முக்கியமான ஆள். சோ அப்படி ஒரு DNA நமக்கு.
திரு. ராஜேஷ் சார்:
பெரிய விஷயம் சார். DNA வரதே கஷ்டம் சில பேர் ஜம்பிங் ஜீன் ஆயிடும். பெரிய விஷயம் சார் அது. பெரிய பெரிய அருள் அது. எந்த வயசுல பாட ஆரம்பிச்சீங்க.
பாடகர் பிரசன்னா:
நான் வந்து ஒரு 6 வது , 5 வது வகுப்பு படிக்கும்போது வயலின் வாசிக்க ஆரம்பிச்சு.
திரு. ராஜேஷ் சார்:
பத்து வயசு.
பாடகர் பிரசன்னா:
ஆமா சார்.
திரு. ராஜேஷ் சார்:
அப்ப நீங்க ஒரு சைல்ட் பிராடஜி மாதிரியா?
பாடகர் பிரசன்னா:
பிராடஜினு சொல்ல முடியாது சார். அப்ப இருந்து கத்துக்க ஆரம்பிச்சுட்டேன்.
திரு. ராஜேஷ் சார்:
கத்துக்க ஆரம்பிச்சிட்டீங்களா. கத்துக்குட்டி தான். மத்தபடி பாலகிருஷ்ணா ஃப்ரூட் வாலி மாதிரி சைல்ட் ப்ராடக்ட் கிடையாது.
பாடகர் பிரசன்னா:
சைல்ட் ப்ராடக்ட் கிடையாது.
திரு. ராஜேஷ் சார்:
இல்ல மறைக்கிறீங்களா?
பாடகர் பிரசன்னா:
இல்ல சார். இல்ல சார். இல்லாத இருக்குன்னு சொல்றாங்க. இல்லன்னு சொல்றதுல என்ன இருக்கு. ஆனா அதுக்கப்புறம் ப்ராப்பரா லேர்ன் பண்ணி நெய்வேலி சந்தான கோபாலன் சார். நிறைய ஒரு பத்து குரு. பெரிய பெரிய பாக்கியம் அதெல்லாம் குரு அமைவதெல்லாம் பெரிய விஷயம். பெரிய பெரிய மாஸ்டர்ஸ் அமைஞ்சாங்க.
அப்புறம் சினிமாலையும் சான்ஸ் கிடைச்சது. ஒரு 1200, 1300 படங்கள் பாடி இருக்கேன்.
திரு. ராஜேஷ் சார்:
கர்நாட்டிக் படிச்சீங்களா, வெஸ்டர்னும் படிச்சீங்களா?
பாடகர் பிரசன்னா:
கர்நாட்டிக் மியூசிக், சினிமா சாங்ஸ். ஹிந்துஸ்தானி கொஞ்சம் கத்துக்கிட்டேன்.
திரு. ராஜேஷ் சார்:
ஹிந்துஸ்தானி!
பாடகர் பிரசன்னா:
அதனால நல்ல ஒரு கார்ட்ஸ் கிப்ட். இப்ப படங்களுக்கு மியூசிக் டைரக்ஷன் பண்ணிட்டு இருக்கேன் சார்.
திரு. ராஜேஷ் சார்:
டைரக்ஷன்?
மியூசிக் டைரக்ஷன்.
பாடகர் பிரசன்னா:
மியூசிக் டைரக்ஷன். மூணு படம் பண்றேன். ஒரு படம் மறுபடியும் பண்ணிட்டேன். இப்போ ரெண்டு மூணு படங்கள் சைன் பண்ணி இருக்கேன்.
திரு. ராஜேஷ் சார்:
அதுக்கு வந்து கர்நாட்டிக்கா?
ஹிந்துஸ்தானியும் படிச்சிங்களா?
பாடகர் பிரசன்னா:
இல்ல சார் அது வந்து பேசிக் லெனின் ஒன்னு. அத வச்சு எப்படி நம்ம பண்ண போறோம் அப்படிங்கறது டோட்டல் வேற நாலேஜ். இன்னைக்கு இருக்குற ட்ரெண்டு இன்னைக்கு என்ன தேவை இன்னைக்கு என்ன பசங்க காலேஜ்ல என்ன சொன்னா கத்துறாங்க. என்ன சொன்னா கிளாப் பண்றாங்க. அப்படிங்கிற விஷயத்தை வச்சுக்கிட்டு. இன்னைக்கு என்னவோ அதுக்கேத்த மாதிரி அதுக்கும் மியூசிக்கும் நமக்கு சம்பந்தம் கிடையாது. அதை கத்துக்கிட்டது வச்சு எப்படி எஸ்சன்ஸ் குடுக்க போறோம், அப்படிங்கறது தான். அது தனி ட்ரக் தனி நாலேஜ் தான் அது. அது காட்ஸ் கிரேஸ் அது டைரக்டர் சொல்லும்போது கரெக்டா நமக்கு
திரு. ராஜேஷ் சார்:
நீங்க பாட்டு பாடிகிட்டே மியூசிக் நா. ஏறக்குறைய
ஏ .எம் ராஜா மாதிரி நீங்க.
பாடகர் பிரசன்னா:
பெரியவங்க லெஜெண்ட்ஸ்.
திரு. ராஜேஷ் சார்:
பெரிய அருள் சார். கலை இசை இதெல்லாம் தெரிஞ்சுக்கிறீங்க பாடகர்கள் எல்லாம் அடேங்கப்பா
பாடகர் பிரசன்னா:
ரொம்ப பெரிய ஹார்ட் சார் அது. ரொம்ப பெரிய கொடுப்பினை. ஆண்டவன் எனக்கு ராகவேந்திர ஸ்வாமி அருள் ல உள்ள பெரியவங்களோட ஆசிர்வாதத்தில.
திரு. ராஜேஷ் சார்:
நீங்க அந்த ஐஸ்கிரீம் இது எல்லாம் சாப்பிட மாட்டீங்க. சிகரெட், மது எல்லாம் சேர்க்க மாட்டீங்க.
பாடகர் பிரசன்னா:
இல்ல சார் எதுவுமே இல்லை சார். பட் என்ன நான் சொல்வேன்னா உடம்புக்கு அந்த நேரத்துல ஓகே அப்படின்னு தைரியம் இருந்தா, அந்த நேரத்துல செஞ்சு கேர்ஃபுல்லா இருந்துக்கணும் அவ்வளவுதான். இது செய்யலாம்னு சொல்ல மாட்டேன் செய்யக்கூடாதுன்னு சொல்ல மாட்டேன்.
திரு. ராஜேஷ் சார்:
ஏன்னா பொதுவா இந்த சங்கீதக்காரர்கள் எல்லாம் இதுல பெரிய ஆளுங்க. அந்த காலத்துல இப்ப இருக்காங்களா என்னன்னு தெரியாது.
பாடகர் பிரசன்னா:
இருக்காங்க சார். இப்பவும் இருக்காங்க. காரணம் என்னனா கலைஞன் வந்து ரொம்ப டெண்டர் ஆன மனசு. ரொம்ப லேசான மனசு டப்புன்னு விழுந்துருவான். ஒரு விஷயம் நல்லா இருக்குன்னு தெரிஞ்சதுனால தான் கலையில விழுந்தான்.
இதுவும் நல்லா இருக்கு போல இருக்கேனு அங்கேயும் விழுந்துருவான். எங்கெல்லாம் நல்லாருக்குனு இருக்கிறானோ அங்கெல்லாம் விழுந்துருவான்.
திரு. ராஜேஷ் சார்:
வெள்ளி செம்பில வச்சு.
பாடகர் பிரசன்னா:
ஒண்ணுமே பண்ண முடியாது.
திரு. ராஜேஷ் சார்:
சில பேர் அதை சாப்பிட்டால் தான் நல்லா வருதுன்னு வேற சொல்லுவாங்க.
பாடகர் பிரசன்னா:
ஏன்னா ரெண்டுமே ரசிக்கிறான். அதனால தப்பிக்கவே முடியாது. ஒரு கலைஞனா பார்க்கும்போது அது ரசிச்சு சிக்கிடறாங்க தப்பா போயிடுறாங்க.
திரு. ராஜேஷ் சார்:
நிறைய பேர் அதுல சீர் அழிஞ்சிட்டாங்க. நாதஸ்வர வித்வான்கள் பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் விழுந்துட்டாங்க. இந்த இசை விற்பனர்களை பத்தி பயோகிராபி படிச்சேன். அதுல பூராம் அவர்கள் எல்லாம் அப்படித்தான் பாவம் ரொம்ப கஷ்டமா இருந்தது எனக்கு மனசு.
பாடகர் பிரசன்னா:
கடைசில என்ன முக்கியமோ அது கடைசில காணாம போயிரும். இது டாமினேட் பண்ணிரும். எனக்கு இந்த ப்ரோக்ராம் ரொம்ப பிடிக்கும் சார். என்னன்னா நிறைய பீல்ட் நிறைய விஷயங்கள் விதவிதமான ஆட்கள். நிறைய நீங்க சொல்லும்போது எனக்கு உங்க மேல ஒரு இம்ப்ரஷன் என்னன்னா எல்லார்கிட்டயும் கரெக்டா கேள்வி கேக்குறதுல மட்டும் இல்ல, அதுல உங்களுக்கு எல்லாத்துலயும் நாலெட்ஜ் நீங்க டெவலப் பண்ணி இருக்கீங்க அப்படிங்கறது பெரிய இம்ப்ரெஸ்ஸன் சார். ரொம்ப பெரிய விஷயம் சார்.
திரு. ராஜேஷ் சார்:
ஏதாவது ஒன்னு பாடி காமிக்க முடியுமா? பாப்புலர் சாங் ஒன்னு. ஒரு கர்நாடிக் ஒரு பாப்புலர் சாங்.
அது ரசிக்கிறீங்க.
பாடகர் பிரசன்னா:
எஸ் சார். நம்ம இங்க ரசிச்சோம்னா அங்கு அவங்க ரசிப்பாங்க.
திரு. ராஜேஷ் சார்:
ஆமாமா அது இதயத்தில் இருந்து வரணும்.
பாடகர் பிரசன்னா:
உங்களுக்கு சொல்ல வேண்டியது இல்லை. நீங்க மகான்களை எவ்வளவு ரசித்து இருப்பீங்க. அதனால நான் எவ்வளவு ரசித்து இருப்பேன்.
திரு. ராஜேஷ் சார்:
நானா சிவாஜி, எம்.ஜி.ஆர் இவங்கள பார்த்தோம். உங்களுக்கு யாரு பாடவர்கள்ல குரு?
பாடகர் பிரசன்னா:
எனக்கு வந்து சார் நிறைய ஹிந்துஸ்தானி சிங்கர்ஸ் பண்டித் ஜஸ்ராஜ் எப்பவுமே கேட்பேன். கவலில வந்து மஸ்ரத் பெடலிகா ஜெகதீஷ் சிங்.
திரு. ராஜேஷ் சார்:
மண்ணாடேம்பாங்களே அவரெல்லாம்
பாடகர் பிரசன்னா:
அதான் அந்த ஏரியால அது என்னமோ பண்ணு சார் அது. என்னன்னே சொல்ல முடியாத மாதிரி ஒரு உணர்வு தான் என்ன வந்து கேட்க வைக்குது முதல்ல. ப்ராப்பரா கத்துக்கிட்டது நெய்வேலி சந்தான கோபாலன் சார். அப்புறம் கேவி நடராஜ பாகவதர் சார். அது மாதிரி கர்நாட்டிக் மியூசிக், ஒரு இசைன்னு நீங்க உண்மையா ரசிக்க ஆரம்பிச்சுட்டீங்கன்னா எல்லாமே ஒன்னுதான். இது வந்து எப்படி சொல்றது? ஒரு நல்ல இசை நல்ல பாடகர் யார் பாடுநாளுமே கேட்கணும்னு தோணும். கத்துக்கணும்னு தோணும் அந்த லெவல் வந்துரும். அதுவரைக்கும் தான் எனக்கு இவர் ரசிகர் அவர் ரசிகர் னு சொல்லிட்டு இருப்போம். கலையா பாக்கும்போது யார் நல்லா பண்ணினாலும் அவங்கள ரசிக்கிற மாதிரி ஆயிரும் ஒரு ஸ்டேஜ்ல.
திரு. ராஜேஷ் சார்:
நான் எல்லாம் அப்படி ஆனேன். முதன் முதல்ல ஃபிக்ஸடா இருந்துச்சு. ரெண்டு மூணு பேருக்கு மேல பார்க்க மாட்டோம். வேற நடிகை வந்தா இப்படி பார்க்கிறது ஸ்ரீதேவி மட்டும் வந்தால் இப்படி பார்க்கிறது. சாவித்திரி வந்த இப்படி பார்க்கிறது இப்படி எல்லாம் இருந்தது. அப்புறம் எல்லாரும் ரசிக்க ஆரம்பிச்சோம். சக நடிகர்களைக் கூட ரசிக்க ஆரம்பித்தோம். எல்லாத்தையும் ரசிக்கிறதுக்கு ஒரு பக்குவம் வேணும்.
பாடகர் பிரசன்னா:
ஆமா உண்மையா கலை எங்க கிடைச்சாலும் எடுத்துக்கலாம் என்கிற ஆர்வம் தான்.
திரு. ராஜேஷ் சார்:
சில பேரை தவிர யாருக்குமே திறமை இல்லைங்கற மாதிரி ஒரு காலத்துல இருந்துச்சு எண்ணம். அப்புறம் எல்லாருக்குமே திறமை இருக்கு அப்படிங்கறது மனப்பக்குவம் மன வளர்ச்சி.
பாடகர் பிரசன்னா:
மனவளர்ச்சி மட்டுமல்ல ,சோசியல் மீடியா வளர்ச்சி மீடியா வளர்ச்சி அந்த காலத்துல நிறைய பேருக்கு சான்ஸ் கிடைக்கல இருந்திருந்தால் நிறைய வெரைட்டீஸ் அப்பவே இருந்திருக்கலாம். அத்தனை வெரைடீசும் காணாமல் போச்சு. இப்போ அதுக்கான சான்சஸ் வந்து இப்போ நம்ம இந்த கேமரா பார்த்து நான் இப்போ பாடுறேன் அப்படின்னா அன்னைக்கு இது இல்ல. எல்லாருக்குமே கிடைக்கல. ஒவ்வொருத்தவங்க வீட்டுக்கும் போதே சார். அப்போ சினிமா வரும் நிறைய பேர் பார்க்க கூட மாட்டாங்க. இப்போ எல்லாருமே செல்லுலையே பாக்குறாங்க சார்.
திரு. ராஜேஷ் சார்:
கிரியேட்டர்ஸ் இன்னைக்கு நிறையா எக்ஸ்ட்ராடினரி ஆயிட்டாங்க சார். பயங்கரம் போட்டோகிராபில எடுக்குறாங்க பாலு மகேந்திர மாதிரி இருக்கு.
பாடகர் பிரசன்னா:
அன்னைக்கு இன்னும் நிறைய பேர் இருந்திருப்பாங்க சார் நம்ம மிஸ் பண்ணிட்டோம்.
திரு. ராஜேஷ் சார்:
நல்ல அருமையான பார்வை. ரொம்ப ரொம்ப நன்றி. இப்போ இது வந்து ரொம்ப அருமையா நீங்க சொன்னா தான் நல்லா எடுபடும் இது. எனக்கு அதுல நாலேஜ் இல்ல நீங்க தான் ரொம்ப அருமையா சொன்னீங்க. ரொம்ப அருமையா இருந்தது ரொம்ப நன்றி சார்.
பாடகர் பிரசன்னா:
ரொம்ப ரொம்ப சந்தோசம் சார்.
உங்கள நேரா பார்த்தது மட்டும் இல்ல. எனக்கு ரொம்ப நாளா எங்க அம்மாவுக்கு எல்லாம் உங்கள ரொம்ப பிடிக்கும். அந்த ஏழு நாட்கள்னாலே நீங்க வந்து அந்த காலத்துல வந்து நான் சின்ன வயசுல இருக்கும்போது கேள்விப்பட்டிருக்கேன் ராஜேஷ் அப்படின்னாலே அந்த காலத்துல பெரிய இது எல்லாருக்கும் பிடிக்கும். இப்பவும் உங்கள ரொம்ப பிடிக்கும் எல்லாருக்குமே. உங்க ஆக்டிங் ஸ்டைல் அந்த டேலண்ட் அந்த டயலாக் மனப்பாடம் பண்ணி சொல்றது உங்கள் ரொம்ப பெரிய விஷயம். உங்களோட உட்கார்ந்து பேசுறது ரொம்ப பெரிய பாக்கியம் சார்.
திரு. ராஜேஷ் சார்:
உங்களோட உங்க கலை உள்ளதோட அந்த திறமை. எவ்வளவு நேர்மையா சொல்றீங்க பாருங்க. எவ்வளவு குயிக்கா நான் தெரிஞ்சுகிட்டேன் சொல்றீங்கல. அதுவும் உங்க பாரம்பரியம் பெருசு சார். எவ்வளவு வருஷம் 375 வருஷமா.
பாடகர் பிரசன்னா:
இருந்தாலும் சார் எத்தனையோ பேர் இருக்கோம். ஆனா எல்லாருக்கும் வரணும் கொடுப்பினை இருக்கணும். எனக்கும் இருந்துச்சா தெரியல ஆனா பொதுவுடைமூர்த்தி ஐயா அவர பாக்கும்போது அவரோட பேச்சைக் கேட்கும்போது அவர் பேசுற விதம் பழகுற விதம் அதை புரிய வைக்கிற விதம் அதுக்காக அவர் பாடுபடுற விதம். எல்லாரும் தெரிஞ்சுக்கங்கயா ஃப்ரீயா கூட சொல்லி தாரேன். அதாவது சும்மா வார்த்தைக்காக சொல்றதில்ல. ஆனா அவ்வளவு தூரம் வந்து எனக்கு தெரிஞ்சு எத்தனையோ பேருக்கு எவ்வளவோ நல்லது பண்றார். அந்த மனசு நிறைய பேருக்கு அதுவும் நல்லா தெரிஞ்சுக்கணும். எல்லாருமே நல்லா வரணும் அப்படின்ற என்னத்த சொல்லிட்டே இருப்பாரு. பாசிட்டிவான பேச்சு தான் அவருக்கு நெகட்டிவா ஒரு வார்த்தை சொன்னாலும் கோவம் வந்துரும் அவருக்கு. அதெல்லாம் நிறைய கத்துக்கிட்டேன் அப்படி ஒரு மாஸ்டர் எனக்கு கிடைச்சதுக்கு ரொம்ப ரொம்ப குடுத்து வச்சிருக்கேன் சார். இந்த நேரத்துல அவருக்கும் என்னுடைய நமஸ்காரத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
திரு. ராஜேஷ் சார்:
உங்க அம்மா சைடா ஜோசியம் அப்பா சைடா?
பாடகர் பிரசன்னா:
அப்பா சைடு
திரு. ராஜேஷ் சார்:
அது கண்டிப்பா வந்துடும். வாழ்த்துக்கள்.
Website: www.alpastrology.com
Contact: 9786556156 / 9363035656

Comments
Post a Comment