எவ்ளோ சம்பாதித்தாலும் பணம் தங்கவில்லையா? - ALP ஜோதிடம் காட்டும் நல் வழி.
வணக்கம். அட்சய லக்ன பத்ததி ஜோதிடர் ஸ்ரீ குரு உமாவெங்கட்.
அவருடைய லக்னம் விருச்சிக லக்னமாக இருந்தது. விருச்சிக லக்னத்திற்கு வீடு பார்த்தீங்கன்னா ரொம்ப பிரம்மாண்டமாக இருக்கும். ஆனால் வீட்டோட தன்மைகள் அப்படிங்கிறது அவங்களுக்கு திருப்திகரமாகவே இருக்காது.
என்னதான் செஞ்சாலுமே அவங்களுக்கு மன மகிழ்ச்சியோ சந்தோஷமோ நல்ல ஒரு சாடிஸ்பெக்ஷன் ஆன மனநிலையோ அந்த வீட்டில் இருக்காது.
துலாம் லக்னம் :
அதே மாதிரி தான் இந்த துலாம் லக்னம் போறவங்களுக்கும். வீடுன்னு பார்த்தீங்கன்னா அமைப்பாவே இருக்காது. வீட்ல ஏதாவது பிரச்சனைகள் இருந்துட்டே இருக்கும். ஒன்னு கிச்சன்ல ஏதாவது பொருட்கள் போட்டு உடையும். இந்த துலாம் லக்னம் இப்ப கடந்த மூன்று மாத காலமாக நீங்க பாருங்க. உங்க வீட்ல ஏதாவது ஒரு பொருள் ஒடஞ்சுட்டே இருக்கும்ன்னு சொல்லலாம். மனதிருப்பிங்கறது இருக்காது.
அந்த வீட்டிற்கு நமக்கு என்ன செலவு பண்ணாலுமே அது சரியா இருக்காது. பொருட்கள் கெட்டுப் போய்விடும். பாத்ரூம் டேப் அடிக்கடி பிரச்சனை கொடுத்துகிட்டே இருக்கும். அதை மாத்தணும். டைல் ஒடையும் அந்த மாதிரி பிரச்சினைகள் நிறைய இருக்கும்.
கடந்த ஆறு மாசத்துக்கு முன்னாடி விருச்சிக லக்னம் யாருக்கு போகுதோ அந்த தொல்லை இவங்களுக்கு இருந்திருக்கும் அப்படின்னு சொல்லலாம். அனாவசிய செலவுகள் அவங்க வீட்ல நடக்குமானா? நடக்கும்.
சரி இது எதனால் அப்படிங்கற கேள்வி இருக்கும். நம்ம வீடுன்னா நம்ம நிறைய பொருட்கள் வாங்கி எல்லாருமே வைப்பாங்க. எங்க குருஜி சொல்லுவாங்க பொதுவுடைமூர்த்தி சார். வீட்ல வந்து வேஸ்ட் பொருட்கள் அனாவசிய பொருட்கள் அப்படிங்கறது இருக்கக்கூடாது. உங்களுக்கு நித்தியம் உபயோகம் செய்யக்கூடிய பொருட்கள் மட்டுமே வைக்கணும். அல்லாத பொருட்களை மாத்துங்க. அல்லாத பொருட்களை மாற்றுங்க. அதை வந்து அங்க இருந்து எடுத்து போட்டுருங்க அப்படிம்பாங்க.
சனி பகவானுடைய ஆதிக்கம் :
ஏன்னா தேவையில்லாத பொருட்கள் மீது சனிபகவானுடைய ஆதிக்கம் அப்படிங்கறது நிறைய இருக்கும். எனக்கு ஒரு பென் அப்படின்னா அதை நான் என்னைக்கும் யூஸ் பண்ணா பென் வந்து யூஸ் ஆகும். அது ஒரு கிரகத்தின் அனுகூலம்னு சொல்லலாம். அது ஒரு பிளஸ்ஸிங்ன்னு சொல்லலாம். ஒரு பேனாவ வாங்கி நான் ஒரு வருஷமா அதே இடத்துல வச்சிருந்தேனா அது எனக்கு யூஸ் ஆகாது.
அது ஒரு பார்வை பொருள் மட்டும் தான். ஏன்னா அது உதாரணம் மட்டும்தான் சொல்றேன். நிறைய பொருட்கள் எனக்கு தேவையில்லாமல் நான் பயன்படுத்தாமல் இருக்கக்கூடிய பொருட்கள் அப்படிங்கிறது என்னுடைய வீட்டில் சனி பகவானுடைய ஆதிக்கம் நிறைஞ்சிருக்குன்னு அர்த்தம்.
ஒரு டிரஸ் வாங்கினால் ஆறு மாசம் அந்த டிரஸ் போடுறோம். அதுக்கப்புறம் தூக்கி போட்டுறோம். அதை நீங்க ஒரு பீரோல்ல பத்திரமா வைக்கிறீங்க. அதுவே உங்களுக்கு ஒரு இடத்தை அடைக்க கூடிய தன்மை அப்படிங்கிறதும். சனி பகவான் அந்த இடத்தில் நிறைஞ்சி இருக்காருன்னு இருக்கும். அப்போ அந்த சனி பகவான எடுத்து மாற்றிவிட்டு. மகாலட்சுமியை அந்த இடத்தில் கொண்டு வரணும்.
அப்போ தேவையில்லாத பொருட்களை வீட்டில் அடைப்பது என்பது நம்முடைய பொருளாதாரத்தை அங்கு வலுவில்லாமல் ஆக்குறது அப்படிங்கிறது ஒன்னு இருக்கும் அதே மாதிரி அந்த வீட்ல மகாலட்சுமி உடைய ஐஸ்வர்யம் மகாலட்சுமி உடைய அனுகூலம் அப்படிங்கறது அங்க ரொம்ப கம்மியா இருக்கும்.
நம்ம வீட்டை எல்லாருமே, எல்லா வீடுகளிலுமே செய்றது தான். நான் புதுசா சொல்லக்கூடியது இல்ல. துடைக்கிறது, சுத்தம் பண்றது ஒட்டடை அடிக்கிறது.
நீங்க உங்க வீட்ல கடன் அதிகமாகவே இருக்குதுன்னா பாருங்க. உங்க வீட்ல வாசல்ல வீட்டு ஹால்ல அந்த பூஜை ரூம்ல ஒட்டடை அந்த வலை கட்டுவது அப்படிங்கறது அதிகமாக இருக்கும். அத நாம பாக்க மாட்டோம். அதுல தான் அந்த கடன் தன்மை அதிகமா இருக்கும். வீட்ல வலை கட்டுதா அப்ப உங்க வீட்ல ஆதிக்கம் அப்படிங்கறது அதிகமாக இருக்கு. அதை எடுத்து மாற்ற வேண்டும். அப்ப அதை கிளீன் பண்ணனும். யாருமே பண்ண மாட்டாங்க. இன்னைக்கு இல்லாட்டி நாளைக்கு பண்ணிக்கலாம் அப்படின்னு சொல்லிட்டு. அப்போ அத எடுத்து சுத்தப்படுத்துங்க. வீட்ல மகாலட்சுமி அப்படிங்கறது அதிகமாக வருவாங்க.
நறுமணம் தரக்கூடிய பொருட்கள் :
என்னெல்லாம் பொருட்கள் வீட்டுல வைக்கலாம்னு கேட்பாங்க. நிறைய நறுமணம் தரக்கூடிய பொருட்கள் வாங்கி வைங்க. இயற்கையானது, செயற்கையானது கிடையாது. இந்த ஜவ்வாது வாங்கி வைப்பாங்க. லெமன் வாங்கி வைப்பாங்க. கற்பூரம் நம்ம வீட்ல வெள்ளி , செவ்வாய் அப்படிங்கறது தூபதீபம் காட்டணும். வீட்ல கண்டிப்பாக கட்டுவாங்க.
தினமும் காட்டக்கூடிய வீடுகள் அப்படிங்கறது இருக்கும். அப்படி காட்டும் போது நிறைய நமக்கு மாற்றம் வீட்ல வந்து நமக்கு கெட்ட சக்தி அடைந்திருக்கிறது இல்லன்னா வீட்ல இருட்டு அடஞ்சி இருக்கிறது அப்படின்னு சொல்லுவாங்க. அது எல்லாமே மாற்றக்கூடிய தன்மை அப்படிங்கிறது அங்க இருக்குது.
நான் எல்லாமே செய்றேன். எனக்கு எதுவுமே சேடிஸ்பேக்சன் இல்ல. வீட்ல என்னமோ வாஸ்து பிராப்ளம் இருக்குன்னு நினைக்கக்கூடிய நண்பர்கள். என்ன செய்யணும்? வீட்ல வந்து ஸ்டாண்டிங் பாக்ஸ்னு சொல்லுவோம். ஓம் நமசிவாய என்ற மந்திரம் ஒரு பெட்டியில ஓடிட்டே இருக்கும். அந்த ஸ்டாண்டிங் பாக்ஸ வாங்கி வீட்ல வைங்க நிறைய மாற்றங்கள். நீங்க சொல்லக்கூடிய பணவரவாக இருந்தாலும் சரி. வீட்ல வாஸ்து பிரபலமா இருந்தாலும் சரி. அது உங்க ஜாதகத்துல மாற்றக்கூடிய தன்மை அப்படிங்கிறது இருக்குது. உங்க வீட்டுக்கு லட்சுமி கடாட்சம் அப்படிங்கறது கொண்டு வரும்.
தேவையான பொருட்கள் :
பொதுவாக வீடு அப்படிங்கறது நமக்கு தேவையான பொருட்களை மட்டுமே வைப்பது. தேவையில்லாத பொருட்களை அங்கு அடைத்து வைக்கக் கூடாது. அடைத்து வைத்திருந்தாலே நமக்கு பணம் வராதுன்னு சொல்லுவாங்க. ஜன்னல்கள் எல்லாமே வெட்ட வெளிச்சமாக இருக்கணும். இயற்கையான காற்றும் இயற்கையான வெளிச்சமும் நம்ம வீட்டுக்குள்ள வருதா? மகாலட்சுமி நம்ம வீட்டுல நிறைஞ்சு இருப்பாங்க.
அப்படி இல்லையா நீங்க அடைச்சு வச்சிருக்கீங்களா கண்டிப்பாக அந்த வீடு சூரிய வெளிச்சம் இல்லாமல். மகாலட்சுமி இல்லாமல். இருக்கக்கூடிய அமைப்பு அப்படிங்கிறது இருக்கும்.
கணவன் மனைவி பிரச்சினை :
நிறைய வீடுகள்ல கணவன் மனைவி பிரச்சினையா இருக்கும். அவங்க வீட்டு பெட்ரூம் பாருங்க. ஜன்னலை திறக்க மாட்டாங்க. எப்ப பார்த்தாலும் பூட்டியே இருக்கும். இந்த பகல் நேரமாட்டி தொறந்துட்டு கொஞ்சம் அடைச்சு வைக்கிறதுங்கிறது அவங்களுக்கு நிறைய மாற்றத்தை கொடுக்கும்.
அந்த ஜன்னலில் தான் நிறைய பொருட்களை அவங்க எடுத்து ஒளிச்சு வச்சிருப்பாங்க. மாத்தி வச்சிருப்பாங்க. இந்த பேப்பர், சீப்பு தேவையில்லாத பொருட்கள் எல்லாமே அந்த ஜன்னலில் தான் நிறைஞ்சிருக்கும். அது வந்து சுக்கிரன் வாசம் செய்யக்கூடிய ஸ்தலங்கள். அது வந்து நாம மாத்தணும்.
இன்னும் நிறைய சொல்லலாம். நம்ம வீட்ல பணவரவு இருக்கும் வாஸ்துவுக்கு என்னென்ன பொருட்கள் எந்தெந்த இடத்தில வைக்கலாம். எங்க வீட்டுல உதாரணம் சொல்ல போனோம்னா ஒரு ( screen )கார்டைன் எப்படி இருக்கணும். எந்த கலர்ல கார்டைன் இருக்கணும். ஒரு பெட்ல எந்த கலர் துணி விரிக்கனும். அப்படிங்கறது கூட நம்ம வீட்டு மகாலட்சுமியை கொண்டு வருவதற்கு ஒரு ஐதீகமாக அங்க இருக்கும். மீண்டும் இதுபோல் வீடியோவில் சந்திக்கலாம்.
நன்றி.
Website: www.alpastrology.com
Contact: 9786556156 / 9363035656

Comments
Post a Comment