alp astrology

 3000 வருஷத்துல யாரும் கண்டுபிடிக்காததை இவர் எப்படி கண்டுபிடித்தார்?




திரைக்கலைஞர் திரு.  ராஜேஷ் சார்:


அடுத்து நாம் சந்திக்க இருப்பது ஒரு ஜட்ஜ். அந்த அம்மாவை நாம்  சந்திக்க இருக்கிறோம். வணக்கம்மா. உங்க பேருமா?


ALP ஜோதிடர்  :


 நாகரத்தினம்.


திரு .ராஜேஷ் சார்: 


உங்களுக்கு எப்படி மா திடீர்னு இதுல? 


ALP ஜோதிடர் :


எனக்கு இது சின்னப் பிள்ளையில இருந்தே ரொம்ப ஆர்வங்க. என்னுடைய சித்தப்பா ஜோதிடராக இருந்தாங்க.

என்னுடைய அப்பா தாத்தாவுக்கு தம்பி சின்ன தாத்தா. அவங்களும் ஜோதிடம் பார்ப்பாங்க. அது சின்ன பிள்ளையில் இருந்து பார்ப்பேன். எனக்கு தெரியாது. ஆனால் ஆர்வம் இருக்கும். எதை எங்க என்ன பேப்பர்ல இருந்தா கூட எடுத்து எடுத்து படிச்சுக்குவேன். எந்த பெயர்ச்சி நடந்தாலும் எது நெகட்டிவ் பாயிண்டோ அதை மட்டும் எடுத்து வச்சுக்குவேன். அதை எக்ஸ்பெக்ட் பண்ணுவேன். அதை எதிர்பார்த்து ரெடியா இருப்பேன். அதை தாங்கிக்கலாம். இதெல்லாம் வரும். பிரகாஷியஸ்ஷா இருந்துக்கலாம் அப்படின்னு. 


திரு . ராஜேஷ் சார்: 


நல்லா இருக்கே. அவன் அவன் பாசிட்டிவ தேடுனா நீங்க நெகட்டிவ்வ தேடுறீங்க.


ALP ஜோதிடர் :


என்ன நமக்கு நெகட்டிவ் தெரிஞ்சா நம்ம அதுக்கு தகுந்தாப்ல நாம மாறி போய்க்கலாம். 


திரு . ராஜேஷ் சார்: 


ஆமா எஸ்கேப் டிபன்ஸ். 


ALP ஜோதிடர் :


கொஞ்சம் பரவாமல் இருக்கும்.


திரு . ராஜேஷ் சார்: 


உங்க நட்சத்திரம் என்ன? 


ALP ஜோதிடர் :


என்னோட நட்சத்திரம் நான் பிறந்தது திருவாதிரை. 


திரு .ராஜேஷ் சார்: 


அவரும் திருவாதிரை தான் சொன்னார், சுரேஷ் சார். 


ALP ஜோதிடர் :


திருவாதிரை மிதுன ராசி. தனுசு லக்னம். 


திரு . ராஜேஷ் சார்: 


தனுசு லக்னமா? 


ALP முறையில் மிதுன லக்னம்


ALP ஜோதிடர் :


ஆனா எங்க அட்சய லக்ன பத்ததி படி எனக்கு இப்ப மிதுன லக்னம் போயிட்டு இருக்கு. 


திரு .ராஜேஷ் சார்: 


மிதுன லக்னம்  போயிட்டு இருக்கா?


ALP ஜோதிடர் :


ஆமாம் அதுதான் இப்ப கணக்கு. 


திரு . ராஜேஷ் சார்: 

அதுதான் கணக்கா? 


ALP ஜோதிடர் :


அதனால தான் உங்களை சந்திக்க முடியுது. 


திரு . ராஜேஷ் சார்: 

அப்படியா? 


ALP ஜோதிடர் :


லக்னத்துக்கு இப்ப பொறந்ததுல இருந்து இப்ப ஏழாவது இடத்துலேல இருக்கு. அப்போ நண்பர்கள் சமூகம் எல்லாம் விரிவடையும்ல. அதனால ஒரு மிகப்பெரிய சமூகத்தில உட்காந்திருக்கேன். என் சமூகம் உன் முன்பாக செல்கிறதுனு ஏசுநாதர் சொன்னார்ல. இப்போ உங்க முன்னாடி உட்காந்திருக்கேன். 


திரு . ராஜேஷ் சார்:


இதுல பைபிள் எல்லாம் வேற படிச்சிருக்கீங்களா? 


ALP ஜோதிடர் :


எல்லாமே படிக்கணும்ல.


திரு . ராஜேஷ் சார்:


படிக்கணுமா? இல்ல ஜட்ஜ்க்காக படிச்சீங்களா?


ALP ஜோதிடர் :


இல்ல. எனக்கு ரொம்ப ஆர்வம். தமிழ்லயும் கொஞ்சம் ஆர்வம். எல்லா புத்தகங்களும் வாசிப்போம். 


திரு .ராஜேஷ் சார்:


ஆனா உங்கள பார்த்தா தமிழ் ஆசிரியர், ப்ரொபசர் அந்த மாதிரி தான் இருக்கு. உங்கள பாத்தா ஜட்ஜ் மாதிரி தெரியல. ஜட்ஜ் எல்லாம் சிரிக்க மாட்டாங்களே. நான் பார்த்திருக்கேன்.


ALP ஜோதிடர் :


பட்டிமன்றமும் பேசுவேன். கல்லூரி படிக்கும் போது. ஞானசம்பந்தன் ஐயா கூட.


திரு .ராஜேஷ் சார்:


ஆமா, சோழவந்தான். 


ALP ஜோதிடர் :


ஆமா சோழவந்தான். அவர் கூட பேசிட்டே தான் BSC BL எல்லாம் மதுரைல படிச்சது. அதுக்கு அப்புறம் MLக்கு சென்னை வந்தாச்சு. 


திரு . ராஜேஷ் சார்:


எனக்கு 11 வயதுல ஆரம்பிச்சது. எங்க அத்தை ஒருத்தவுங்க அந்த மாதிரி புக் லாம் எழுதியிருக்கேன். பதினொரு வயதில ஆரம்பிச்சது. அதுல இருந்து எனக்கு இதே ஆய்வு செஞ்சிட்டே வந்தேன். ஒரு 20 வயது வரை. 11ல இருந்து 8,9 வருஷம். எங்கெங்க நியூஸ் கிடைக்குதோ எல்லாத்தையும் மண்டக்குள்ள தான் எழுதி வச்சிக்கிட்டேன். உட்காந்து எழுதல. அதுக்கு அப்புறம் எனக்கு 34 வது வயசுல தான் நாடி ஜோதிடம் பார்க்கும் போது எனக்கு ஒரு திருப்பம். இதுல இவ்வளோ உண்மை எப்படி இதுக்குள்ள இருக்கு. இது எப்படி  கவனிக்காம ஜனங்க எல்லாம் இருக்காங்க? அப்டின்னு எனக்கு ஆச்சர்யமா இருந்துச்சு. ஒரு மாபெரும் உண்மை. அதுல குறிப்பா இந்து மதம்னா  ஒரு பெரிய ரோல் பிளே பண்ணுது. வெளிநாட்டுல லாம் இருந்தாலும் கூட. வருஷம் 365 நாளையும் இவுங்க ஜோதிடதோட பின்னி பினஞ்சி


ALP ஜோதிடர் :


எந்த முடிவு எடுக்கிறதா இருந்தாலும் கூட இத வச்சி தான் முடிவெடுகிறாங்க. 


திரு . ராஜேஷ் சார்:

ஆமா. அந்த மாதிரியான இந்து மதம் ரொம்ப ஆழமான ஒரு விசயங்கள சொல்லிற்கு. ரொம்ப ஆச்சரியம் தான். 

எனக்கு 11 வயசு உங்களுக்கு எந்த வருஷம்? 


ALP ஜோதிடர் :


எனக்கு எப்படி நாங்க ஐயா, எனக்கு திருவாதிரை நட்சத்திரம். மிதுன ராசி. லக்னம் தனுசு. அப்ப எப்படி பார்த்தாலும் இது ஏழுக்கு ஏழு இருக்கும்போது எனக்கு ராகு கேது பெயர்ச்சி மட்டும் பார்த்தா ராசிக்கு நாலுல இருக்கும் லக்னத்திற்கும் நாலுல வரும். அப்படி அது வரும்போது அது எஃபெக்ட் என்ன அப்படின்னு எங்க சித்தப்பா அவர் ஜோதிடம் பாக்குறவர் தான். அப்போ அதனுடைய எஃபெக்ட் என்ன அப்படின்னு அவர்கிட்ட கேட்பேன். அவர் வந்து ராசிக்குதாம்மா பாக்கணும் அப்படின்னு சொல்லிட்டு விட்டுடுவார். அப்ப என்னன்னா அவர் சொல்லும்போது நான் வச்சு பொருத்தி, எனக்கு தெரிஞ்ச அளவுக்கு புஸ்தகத்தைப் படித்து பார்க்கும் போது எதுவுமே ஒத்து வராது. ஒன்னு கூட சரியாவே வராது. 


ராசிக்கு மட்டும் பாருங்க. ஏன் நீ லக்னத்துக்கு போய் டச் பண்ற. உடம்ப தான்மா பாக்கணும். உயிரை ஏன் லகனத்த பாக்குற அப்படின்னு அவர் சொல்வார். 


திரு .ராஜேஷ் சார்: 


ஆமா, அப்படி சில பேர் சொல்லுவாங்க. ஆனா நாடியில பூரம் லக்னம் தான் வரும். நாடி ஜோதிடம் கூட லக்னம் தான் ஒண்ணா வைப்பாங்க. 


தரிசனம் மூலமாக பதில் என்னிடம் வந்துவிடும்


ALP ஜோதிடர் :


ஆனா எங்க இதுல வளரும் லக்னம் அப்படின்னு வச்சு பாக்குறது எனக்கு ரொம்ப ஆப்டா இருந்தது. அப்பதான் இந்த தேடல் இருக்கும் போது தான் நான் you tube-ல பார்க்கிறேன்.

அப்ப அய்யாவோட ஆத்ம தரிசனம் எனக்கு கிடைச்சது. எப்படின்னா நீங்க youtube போட்டது நான் ரெக்கார்ட் பண்ணி பாக்குறேன் இல்லையா? 

அதுல எங்க ஐயா என்கிட்ட பேசுவாங்க. மனசுல எழுகிற என்னுடைய கேள்விகளுக்கு எங்க ஐயா கிட்ட நல்ல பதில் அதிலேயே கிடைச்சிடும். அப்படித்தான் நான் பார்த்துட்டே இருக்கும்போது பார்த்தா 4.10.2023 வகுப்பு ஆரம்பிக்கிறதா இருந்தது. நான் அதுக்கு அப்ளை பண்ணலாம் சரி இன்னும் ஒரு மாசம் இருக்குல நமக்கு எப்படி அமைப்பு இருக்குதோ? எப்ப பாத்தாலும் நாம ஏதாவது ஒன்னு ஜாயின் பண்றோம். இன்கம்ப்ளீட்டா விட்டுடுறோம். இது எப்படி நமக்கு அமையப் போதோ அப்படி பாக்கல டைம் இருக்குல்ல அப்படின்னு யோசிச்சிட்டே இருக்கும் போது பார்த்தா ஒரு பத்து நாள் இருக்கும்போது ஐயா எங்க வீட்டுக்குள்ள எங்கெங்கயாவது நிப்பாங்க. அவங்க நிழல் உருவத்தை நான் பார்ப்பேன். வருவார் பாப்பேன். 


திரு . ராஜேஷ் சார்:


என்னங்க இது? யாரு மூர்த்தி சாரா? 


ALP ஜோதிடர் :


எங்க ஐயா வருவாங்க பாப்பேன். 


திரு . ராஜேஷ் சார்: 


என்னங்க அஸ்ட்ரல் பாடி மாதிரி. 


ALP ஜோதிடர் :


சுத்தி சுத்தி வந்து நிப்பாங்க.


திரு . ராஜேஷ் சார்: 


ஹீரோ மாதிரி சொல்றீங்க. 


ALP ஜோதிடர் :


உண்மை அது. அவ்வளவு உண்மை அது. நான் இந்த வகுப்பு படிக்கும் போது கூட நான் எங்க வீட்ல தான் இவரை பார்த்து இருக்கேன். காலைல 4:30 - 6.30 அந்த இடமே அப்படியே நிறைஞ்சிருக்கும். நான் பிரேயர்ல உட்காருவேன். நான் மெடிடேஷன் பண்ணுவேன். உட்காருறேன் அப்ப ஐயா வந்து நிக்கிறாங்க. எப்படி வந்து நிக்கிறாங்கன்னா? ஐயாவோட மார்பில மகாவீர் பாபாஜி ஓட அந்த உருவம் இருக்கு.  அவருடைய ஒளி அப்படியே என் மேல படுது. 


திரு . ராஜேஷ் சார்:


பாபாஜினா யாரு? 


ALP ஜோதிடர் :


மகாவீர் பாபாஜி. 


திரு . ராஜேஷ் சார்: 

இமயமலையில இருக்காரே, ரஜினி சார் சொல்லுவாங்கல அவங்களா? 


ALP ஜோதிடர் :


ஆமாமா. அதுக்கப்புறம் நீம் கரோலி பாபா தெரிவாங்க. ஐயாவோட முதல் குழந்தைக்கு பிறந்த நாள் எங்ககிட்ட வகுப்புல இண்ட்ரடியூஸ் பண்ணாங்க, அப்போ என்னன்னு பார்த்தா எல்லாரையும் காமிச்சிட்டாங்களே நீம் கரோலி பாபா மட்டும் நம்ம இவர்கிட்ட பாக்கலையே அப்படின்னு யோசிச்சுட்டு உட்கார்றேன். அப்படியே ஐயா செக்கசவேர்னு இருக்காங்க. அப்படி உட்கார்ந்து இருக்கிறார். அவர் சிரிச்சுகிட்டு இருக்காரு. அவங்க அங்குட்டும் இங்கிட்டும் திரும்பும் போது நான் அவரை தான் பார்க்கிறேன். அவர்தான் தெரியுறாரு.


திரு . ராஜேஷ் சார்: 


தேடுங்கள் கண்டறிவீர்கள் அது மாதிரியா? 


ALP ஜோதிடர் :


நான் எதை தேடி கொண்டிருந்தேனோ அது என்னை தேடி வந்தது.


திரு .ராஜேஷ் சார்: 


தட்டுங்கள் திறக்கப்படும் மாதிரி. 


ALP ஜோதிடர் :


இல்ல நான் எதைத் தேடிக் கொண்டிருந்தனோ அது என்னை தேடி வந்துவிட்டது. அது மௌலானா ரூமி இதத்தான் சொல்லுவாரு. ஏன்னா நான் தேடலில் இருக்கேன். மிதுன ராசினாலோ என்னமோ தெரியல. எப்ப பாத்தாலும் ஒரு புத்தகம் கையில பேனா இருக்கும். 


திரு .ராஜேஷ் சார்: 

இப்போ எந்த ஊர்ல இருந்து வந்திருக்கீங்க? 


ALP ஜோதிடர் :


நாங்க இப்ப கூடுவாஞ்சேரியில் தான் இருக்கோம். 


திரு .ராஜேஷ் சார்: 


ஓ இருக்கிறது கூடுவாஞ்சேரியா?

ஜக்கா முத்துவேல் வாத்தியாருக்கு நீங்க உறவினர்னு சொன்னவுடனே எனக்கு வாத்தியாருக்கே என்னை தெரிஞ்சதான்னு ஆச்சரியப்படுறேன் நான். நான் தான் ஸ்டூடண்ட் யாரும் சொல்லி இருப்பாங்களா?


ALP ஜோதிடர் :


சொன்னாங்க சொன்னாங்க. 


திரு .ராஜேஷ் சார்: 


எப்போ இறந்தார்? 


ALP ஜோதிடர் :


அவர்  இறந்து பத்து வருஷம் இருக்கும். 


திரு .ராஜேஷ் சார்: 


பத்து வருஷம் தானே அப்ப என்னோட படங்கள் எல்லாம் பார்த்திருப்பார். மேத்தமேடிக்ஸ்  சொல்லி கொடுத்தாரு நினைக்கிறேன். வேஷ்டி கட்டிக்கிட்டு வருவாரு. அவருடைய தொடர்பில் உங்கள பார்த்தது ரொம்ப ஆச்சரியமா இருக்கு. சிவமுருகேசன்னு ஒரு வாத்தியார் இருப்பார்.


ALP ஜோதிடர் :


நீங்க சொல்வீங்க பாத்தீங்களா? திருமூலருடைய வாக்கு இது. எந்த நேரத்துல இந்த உயிரணு கருப்பை குள்ள போய் விழுகுதோ? அதுதான் இப்ப. 


திரு . ராஜேஷ் சார்: 


அதெல்லாம் கேட்டீங்களா நீங்க? 


ALP ஜோதிடர் :


எல்லாமே கேட்டேங்க. எல்லாமே அதுல நீங்க ரொம்ப தரோவா இருக்கீங்க. நீங்க ஒரு ஜோதிடர்னு கூட சொன்னீங்க. 18 - 20 வருஷமா வாழ்ந்த ஒரு அம்மா, கணவரை விட்டு பிரிஞ்சி ரொம்ப கஷ்டமா இருந்து என்னை வந்து பார்த்து பேசிட்டு போனாங்க. அவங்க ஜாதகம் கூட நீங்க சொன்னீங்க. என்ன லக்னம் சொன்னீங்கன்னா கன்னி லக்னம் சொன்னிங்க. புதன் வந்து மீனத்தில குரு வந்து மகரத்துல பாருங்க புதனும் நீசம், குரு நீசம். அதனால இந்த அம்மா வாழ்க்கை. 


திரு .ராஜேஷ் சார்: 


அந்த அம்மா பேர கூட சொல்லல. ஆனா கோச்சுக்கிட்டாங்க எனக்கு போன் பண்ணி. ரொம்ப கோச்சுக்கிட்டாங்க.


ALP ஜோதிடர் :


இல்ல அந்த விஷயத்துல என்னன்னா அப்படி எல்லாம் ஆயிடுச்சு அப்படின்னு சொன்னீங்க. ஆனா எங்க அட்சய லக்ன பத்ததில நான் பார்த்தேன். அப்ப என்னன்னா அந்த அம்மாக்கு 1973ல பிறந்தாங்கன்னு நீங்க சொன்னீங்க இப்ப பார்க்கும்போது அட்சய லக்னம்படி பார்த்தா அவங்களுக்கு கட்டாயம் மிதுன லக்னம் தான் போகும். அப்ப குரு 11ல இருக்காரு. அப்ப என்னன்னா எங்களுடைய கணக்குப்படி அந்த அம்மாக்கு இரண்டாவது திருமணம் ஆக்டிவேட் ஆகுது.



திரு .ராஜேஷ் சார்: 


உங்களுக்கு முதன் முதலில் இந்த ஜோதிடம் எந்த வயசுல வந்தது? 

எனக்கு 11 வயசுல வந்ததுன்னு சொன்னேன். அப்புறம் 34 ஆவது வயசுல முழுமையா நம்ப ஆரம்பிச்சேன். 60க்கு மேல சுத்தமா நம்பினேன். 70 க்கு மேல ஒண்ணுமே இல்லன்னு உட்கார்ந்துட்டேன். நம்ம இதுனால அலட்டிக்கிறது, இயேசுநாதர் சொல்லுவாரு உன்னுடைய கவலைகளில் ஒரு முழத்தை கூட்டவோ குறைக்கவும் உன்னால் முடியாது. உன் ஆயுசு நாட்கள் எண்ணப் பட்டிருக்கிறன. தலைமுடிகள் மட்டும் எண்ணப் பட்டுள்ளன. சேக்ஸ்பியர் அதே வார்த்தையை சொல்வார் ஸ்டெப்ஸ் ஆர் மெஷர் என்பார். அது மாதிரி நீங்க எப்ப முதன்முதல்ல இது? 


ALP ஜோதிடர் :


நான் வந்து இந்த ஜட்ஜ் எக்ஸாம் எழுதுறதுக்கு முன்னாடி எங்க சித்தப்பா ஜோதிடர் சொன்னேன், இல்லையா அவர் இல்லை தற்போது அவர் தவறிட்டாரு. அவர்கிட்ட கேட்கிறேன் எக்ஸாம் எழுதிட்டேன்பா ரிசல்ட் எப்படி இருக்கும். டிஎன்பிசி குரூப் 1 ஜட்ஜஸ் எக்ஸாம் எழுதியாச்சு. ஜூடிசியல் ஆபீஸர் எக்ஸாம் எழுதிட்டு ரிசல்ட் எப்படி இருக்கும் அப்படின்னு கேட்டேன். அப்ப அவர் சொன்னார் என்னோட கட்டத்தை பார்த்துட்டு, 


நீங்க வந்து சட்டம் படிச்சுட்டுமா, கணக்கு போடுற வேலை செய்வீங்க அப்படின்னு சொன்னார். சட்டம் படிச்சிட்டு என்ன கணக்கு போட முடியும்? ஜட்ஜ் வேலை தான் செய்ய முடியும். தீர்ப்பு எழுதுற வேலை தான் கணக்கு போடற வேலை. அது அவர் சொன்னார். அப்ப நம்பவே இல்லை. செலக்ட் ஆகி உட்கார்ந்த உடனே முதல் ஃபோன் அவருக்கு தான் அடிச்சேன். இந்த மாதிரி நீங்க சொன்னீங்க இல்லப்பா. 


திரு . ராஜேஷ் சார்: 


அவர் நல்ல பெரிய ஜோதிடரா? 


ALP ஜோதிடர் :


அதாவது பாரம்பரியமா பாத்துட்டு இருந்தாங்க. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்.


திரு . ராஜேஷ் சார்: 


சின்னமனூர் பக்கம் உள்ள ஜோதிடர்கள் எல்லாம் எப்படி இருந்தாங்க தெரியுமா மஞ்சப்பை வச்சுட்டு தான் வருவாங்க. அஞ்சு ரூபா பத்து ரூபாய்யே பெரிய விஷயம். இரண்டு ரூபா மூன்று ரூபா வாங்குவாங்க. நான் சொல்றது 61- 62 அப்படியே இருக்குங்க.


ALP ஜோதிடர் :


எங்க ஐயாவுடைய குடும்பமே, ஐயாவே 14வது தலைமுறை ஜோசியர் தானே. அதனாலதான் அவங்க  ஒரு பெண்ணோட கண்ணீரை துடைப்பதற்காக இந்த அட்சய லக்ன பத்ததியே கண்டுபிடிச்சுருக்காங்க. 

ஒரு அம்மா வந்து அழுது இருக்காங்க என் பொண்ணுக்கு செவ்வாய் தோஷம் சொல்றாங்க. கல்யாணமே நடக்கல. அப்படிங்கும் போது அந்த கண்ணீரை வச்சு இவங்க யோசிச்சது தான் இந்த பாரம்பரிய முறையில் இருக்கக்கூடிய எல்லா விதிமுறைகளையும் ஒதுக்கி தள்ளிட்டு ரொம்ப ரொம்ப அத்தியாவசியமான விஷயங்களை மட்டும் எடுத்து ஐந்தே விதிகள் தான் எங்க இதுல. அஞ்சு விஷயத்தை வச்சிட்டு நாங்க உலகமே சுத்தி வருவோம். 

எங்க ALPய என்ன நினைச்சீங்க நீங்க? 

கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய ஜோதிட ஏவுகணை எங்க அட்சய லக்ன பத்ததி. 


ஏன் சொல்றேன்னா 18 , 20 நாடுகளில் இருக்கிற ஸ்டூடண்ட்ஸ் ஐயா கிட்ட படிச்சிருக்காங்க. உலகம் பூராம் ALPஜோதிடர்கள் இருக்காங்க. எங்க ஐயாவோட நோக்கம் என்னன்னா வீட்டுக்கு ஒரு ஜோதிடர் வேணும். எப்படி ஹென்றி போர்ட் மொத மொதல்ல கார் இது பண்ணும் போது வீட்டுக்கு ஒரு கார் வரணும்னு ஆரம்பிச்சாரோ, அது மாதிரி இது உண்மை. இது கட்டாயம் வரணும். ஏன்னா அவங்கவங்க பிரச்சனையை அவங்க அவங்க தெரிஞ்சுக்கணும், தீத்துக்கணும். ஒரு வழி கிடைக்கும். இந்த வழியில் பள்ளம் இருக்கு அப்படின்னா பாதையை மாத்தி போலாமே. இது எனக்கு ஒரு கைடன்ஸ்ல. நீங்க ஆயிரம் புத்தகம் படிச்சு இருக்கலாம். ஆனா மனுசனோட புத்தகத்தை கடவுள் எழுதி இருக்கார். மூணு வரில, பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த ஊர். இந்த மூன்று விஷயத்தை வைத்துக்கொண்டு. நம்ம அச்சே அடிக்க முடியாது இந்த புத்தகத்தை. 


ஏன்னா நம்ம ஜாதகம் அப்படி. இந்தக் கட்டத்துக்குள்ள அடங்காதது யாருமே இல்லை. ஆல்பர்ட் ஐன்ஸ்டீனே இந்த இதுக்குள்ள வந்தாகணும். 


திரு . ராஜேஷ் சார்: 


உண்மை, உண்மை. கட்டம் சரியில்லைன்னா திட்டம் வேலை செய்யாது.


ALP ஜோதிடர் :


நீங்க ஒரு பாட்டுல கூட சொல்லி இருந்தீங்கல. கண்ணதாசன் பாட்டு. உன்னை சொல்லி குற்றமில்லை என்னை சொல்லி குற்றமில்லை, காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி கண்ணதாசன் வரி. கடவுள் செய்தது இதெல்லாம் ஜாதகம் எழுதலாம். 


திரு . ராஜேஷ் சார்:


பொம்பளைங்களுக்கு கொஞ்சம் அறிவு அதிகம் எங்கள விட. இயற்கை படைப்பே அதான. படைப்புதாம்மா. கண்ணு கூட 130° தான் எங்களுக்கெல்லாம். உங்களுக்கெல்லாம் 160°. அந்த அளவுக்கு உங்களுக்கு உண்டு.


ALP ஜோதிடர் :


இந்த ஓலைச்சுவடி பார்த்த உடனே எனக்கு ஒரு ஞாபகம் வருது. என்னன்னா, நாங்க படிக்கும்போது நாங்க எல்லார்கிட்டயும் ஜாதகம் வாங்கி வாங்கி போட்டு பாத்துட்டே இருப்போம். அப்ப நான் வந்து கேட்ட இடமெல்லாம் கிடைக்கல அவ்வளவா படிக்கும்போது. அப்போ எல்லாருக்கும் 10 ஜாதகம் 15 ஜாதகம் வச்சு போட்டு பார்த்துட்டு இருக்காங்க. ஒண்ணுமே கிடைக்கலையே. ஒரு ரெண்டு மூணு தான் கிடைக்குது என் கூட பிறந்தவங்க யாருமே குடுக்கல. என்ன நீ இந்த வேலையை விட்டுட்டு இந்த வேலைக்கு போயிட்டு இருக்க அப்படின்னாங்க. 


எனக்கு பிடிச்சிருக்கு நான் படிக்கிறேன். இஷ்டம் இருந்தா குடுங்க இல்லாட்டி விடுங்கன்னு சொல்லிட்டு கவலையோட படுத்திருந்தேன். அப்போ என் கனவுல வந்து இந்த ஓலைச்சுவடிய என் கையில கொடுத்து இந்தா இத பாரு முதல்ல. ஏன் அது கிடைக்கலையேன்னு நினைக்கிற இதப்படி. அப்படின்னு என் கையில இந்த ஓலைச்சுவடியை குடுத்தாங்க. மறுநாள் அய்யாவோட பதிவு ஒன்னு பார்க்கும்போது டேபிள்ல இந்த ஓலைச்சுவடியை பார்த்தேன் அப்பதான் கனவுல தெரிஞ்ச இது. 


திரு . ராஜேஷ் சார்: 


பிரிமானிஷன் இருக்கும் அப்போ உங்களுக்கு.


ALP ஜோதிடர் :


அதே மாதிரி நான் ஒரு ஜாதகம் சொன்னேன் ஒருத்தருக்கு. அவருக்கு அட்சய லக்னம் மீனம் போயிட்டு இருக்கு. அவருக்கு ஒரு பிரச்சனை. என்னன்னா அவர் ஒரு பைனான்சியர். எல்லார்கிட்டயும் டாக்குமெண்ட் வாங்கி வச்சுட்டு காசு கொடுத்துட்டேன். காச வாங்கி வச்சவருக்கு என்னன்னா ஏதோ ஐடி ப்ராப்ளம் வந்துருச்சு. எல்லா டாக்குமெண்ட்டையும் நாலா பக்கமும் பிரிச்சு ஒவ்வொரு பக்கம் அனுப்பிட்டார். அந்த பிராப்ளம் வரல, ரெடியா இருந்தாலும் எல்லாம் பார்த்துட்டு ஒன்னும் இல்லைன்னு போயிட்டாங்க. 


அதுக்கப்புறம் பார்த்து இவர் எல்லா டாக்குமெண்ட்டையும் ரிகலெக்ட் பண்ணிட்டாரு. அப்போ ஒரே ஒரு இடத்துல குடுத்து வச்சது மட்டும் கைக்கு கிடைக்கல. அப்போ எங்களுக்கு எங்க ஃப்ரெண்ட் மூலமா ஒரு அட்வகேட் போன் பண்ணாங்க இந்த மாதிரி மேடம் ப்ராப்ளம்னு. 


அப்போ நான் பிரசன்னமும் போட்டு பார்த்தேன். அவருடைய பிறந்த தேதி

வாங்கி இதுவும் போட்டு பார்த்தேன். அப்ப பார்த்தா அவரது இது வந்து டாக்குமெண்ட் மறைஞ்சிருக்கு. அஞ்சு காட்டுது பூர்வீகம் கட்டுது குழந்தைகளும் வரும். அப்போ நான் என்ன கேட்டேன் அப்படின்னா பூர்வீகத்திலேயே இருக்கீங்களா இல்ல இடம் விட்டு இடம் வந்துட்டீங்களா? 


அதே இடத்துல இருக்கோம் அப்படின்னு சொன்னாங்க. அப்போ உங்களுடைய பிள்ளைங்க வீட்ல கேட்டு பாருங்க அப்படின்னு சொன்னேன். அதுக்கப்புறம் அவங்க திரும்ப கேட்டுகிட்டே இருந்தாங்க. என்ன மேடம் இது மட்டும் தான் தெரியுதா? ஹின்ட் வேற எதுவும் கிடைக்கலையா? அப்படின்னதுமே. நான் மெடிடேஷன் பண்ணுவேன். போய் உட்கார்ந்தேன். உட்கார்ந்து கேட்கும் போது உட்கார்ந்த உடனே அந்த காட்சி வந்தது. எனக்கு அந்த ரூம காமிச்சு கொடுத்தாங்க. எந்த ரூம்ல அந்த டாக்குமெண்ட் இருக்கு? எந்த சாக்கு பைக்குள்ள இருக்கு அப்படின்னு காமிச்சு குடுத்தாங்க. அது அவங்களுக்கு அப்படியே சொன்னேன். அவங்க எடுத்துட்டாங்க. ரெண்டு நாள் கழிச்சு எடுத்துட்டோம் கிடைச்சிருச்சு. இது எங்கேயோ என்னை இழுத்துட்டு போகுதுன்னு மட்டும் தெரியுது. 


திரு .ராஜேஷ் சார்: 


நீங்க எதுக்கு பிறந்தீங்கன்னே தெரியலையே? ஜட்ஜா பொறந்தீங்களா?


ALP ஜோதிடர் :


இதுக்காக தான் பிறந்தேன். 


திரு .ராஜேஷ் சார்: 

இதுக்காக தான் பிறந்தீங்களா? 


ALP ஜோதிடர் :


ஆமாங்கய்யா உண்மை. இல்லாட்டி நான் அதை முடிச்சிட்டு இங்க வர முடியாது.


திரு .ராஜேஷ் சார்: 


இல்லை இவ்வளவு பெரிய டிராவலிங் ஆச்சரியமா இருக்கு. அஸ்ட்ரல் பாடில தெரிஞ்சாரு இவரு அப்படின்னா, அது ஹீரோல அஸ்ட்ரல் பாடில காமிச்சி இருக்காரு உயிரோடு இருக்கும் போதே. இறந்தவர்கள் அஸ்ட்ரல் பாடில வர்றதுல ஆச்சரியம் இல்ல. 


ALP ஜோதிடர் :


இன்னொரு ஜாதகத்துல நான் ஒரு நட்சத்திர புள்ளி வச்சுட்டு உட்கார்ந்து இருந்தேன். அப்போ நான் உட்கார்ந்து இருக்கேன். ஜஸ்ட் கண்ண மூடுற மாதிரி இருக்கு, காட்சி தெரியுது. அந்த கட்டத்திலே வந்து மேஷத்துக்கு கீழ ஆடு, ரிஷபத்துக்கு கீழே சிம்மம். அதாவது சிங்கம் தெரியுது உருவம். அப்படியே எங்க ஐயா வந்து அதுல ஆடுறாங்க. என்ன அர்த்தம்னா அந்த பையனுக்கு அப்ப டைம் சரியில்ல. என்னோட கணக்கு என்னன்னா இந்த லக்னம் முடியப்போகுது. இன்னொரு ஆறு மாசத்துல அடுத்த லக்னம் வரும்போது சரியா போகுது  ARP மாறுது. 


அதனால அந்த மேஷ லக்னம் மாறப்போகுதுன்னு ஆட போட்டு காமிச்சுட்டாங்க. இந்த சிம்மம்றது வந்து ARP சிம்மத்துல வருது. ARP னா அட்சய ராசின்னு சொல்லுவோம் நாங்க. இன்னைக்கு என்ன தசா புத்தி நடக்குதோ அதுக்கு தகுந்த மாதிரி ராசி மாறும். அந்த இது எனக்கு காமிக்குது. அப்போ இது மாறும் போது இவனுக்கு நல்லா இருக்கும் அப்படின்னு நான் யோசிச்சிட்டு இருக்கிறது காட்சியா கிடைக்குது. ஐயா எதுக்கு அப்படி ஆடி காமிச்சாங்க அந்த சேன்ஜ் ஆப் லக்னம் அண்ட் சேன்ஜ் ஆப் ராசி அப்படிங்கறதுக்கு. அப்போ ஒன்னு ஒன்னும் என்னன்னா நீங்க, நினைச்சீங்கன்னா உங்களுக்கு உடனே விடை கிடைக்கும்.


திரு .  ராஜேஷ் சார்: 


உங்க ஜாதகத்தையும் பாத்துட்டீங்க?


ALP ஜோதிடர் :


நான் பாத்துட்டேன். 


திரு .  ராஜேஷ் சார்: 


உங்க வீட்டில? 


ALP ஜோதிடர் :


எல்லாத்தையும் பாத்துட்டேன். 


திரு .  ராஜேஷ் சார்: 


எல்லாத்தையும் பாத்துட்டீங்க? அதுபடி நடக்குது? 


ALP ஜோதிடர் :


எல்லாமே துல்லியமாக இருக்கு. அப்புறம் எப்படி நாங்க இத விட்டுட்டு ஓட முடியும். 


திரு .  ராஜேஷ் சார்: 


இல்ல இல்ல புரியுது புரியுது. இது புதிய கண்டுபிடிப்பு நல்லா இருக்கு. எத்தனை ஆண்டுகளாக ஏறக்குறைய 3000 - 4000 வருஷம் இருக்குமே ஜோதிடத்துக்கு. இவ்வளவு பேர் இதை கண்டுபிடிக்காம எப்படி இவர் மட்டும் கண்டுபிடிச்சாரு அப்படிங்கறது தான் எனக்கு ஆச்சரியமா இருக்கு. இதுக்கு எந்தவித ஒரு முன், யாரைப் பார்த்து இவர் டெவலப் பண்ணாருன்னே இல்லையே. 


ALP ஜோதிடர் :


அதாவது நீங்க ஏதோ ஆகாஷ் ரெக்கார்ட் செய்து ஒன்னு சொல்றீங்க அதுல இருக்கும் ஐயாவோடது கட்டாயமா இருக்கும். எங்க ஐயா கூட சொல்வாங்க. ஆலமரத்துக்கு கீழ புல் பூண்டு கூட முளைக்காது. ஆனா அதே ஆலமரத்துல கீழ உட்கார்ந்து இருந்தப்ப தான் நீம் கரோலி பாபா கிட்ட உட்கார்ந்து இருந்த அப்ப தான் இந்த அட்சய லக்ன பத்ததி வளரும்ற விஷயம் கிடைச்சிருக்கு. 


அந்த அம்மாவோட கண்ணீரு இவங்க சுயம் இதுக்காக கண்டுபிடிக்கல. இவங்க சொந்த பிரச்சனைக்கு கண்டுபிடிக்கல.


திரு . ராஜேஷ் சார்: 


ஆப்பிள் வச்சிருந்த அவர் கூட போய் 

பார்த்தார் சொன்னாங்க. 


ஜோதிடம் படியுங்கள்



ALP ஜோதிடர் :


ஆமா. நீங்க சொன்னதும் எனக்கு இன்னொன்னு வருது. அதே நீம் கரோலி பாபா கிட்ட நாங்க முடிச்ச உடனே விசிட்டிங் கார்டு போடணும் எனக்கும் ஒரு சிம்பல் கொடுங்கன்னு அவர்கிட்ட கேட்டேன். எனக்கு கொடுத்தார். எப்படி கொடுத்தார்? என்றால் எங்க ஐயா எல்லாம் அங்க இருந்தாங்க எல்லாருமே. ஷேப்ல படுத்து இருந்தாங்க. தமிழ் எழுத்து ய ஷேப்ல படுத்து இருந்தாங்க. நடுவுல நங்கூரம் இருக்கு. இத வச்சுக்கோங்கன்னு சொன்னாங்க. 


இப்ப நங்கூரம்தான் என்னோட விசிட்டிங் கார்டுல போட்டு இருக்கேன். அதனால ஒவ்வொண்ணுமே  ஒவ்வொரு வரிகள் ஒவ்வொரு நிமிடமும், புத்தர் சிலையை பார்த்த மாதிரி தான் சொல்றேன். போதி மரத்துல தான் ஞானம் கிடைக்கணும் அப்படின்னு இல்ல அக்ஷய லக்ன பத்ததி வகுப்பிலும் ஞானம் கிடைக்கும். 


ஒவ்வொரு மாணவர்களும், எத்தனை மாணவர்கள் படிப்பாங்கன்னு நினைக்கிறீங்க? 500 மாணவர்கள் படிப்பாங்க. பிரம்ம முகூர்த்த நேரத்துல படிப்பாங்க. அதாவது நம் வாழ்க்கையின் விடியலுக்காக விடியற்காலை நாங்கள் படிக்கிறோம். அவ்வளவு அற்புதமா இருக்கும்யா அந்த வகுப்புல. நீங்க கட்டாயம் வந்து உட்காருங்கய்யா. என்னுடைய ரெக்வெஸ்ட். நீங்க எத்தனையோ புத்தகம் படிக்கிறீங்க ஒரு 15 நாள் எங்க கூட 


திரு . ராஜேஷ் சார்: 


இது ரெக்வெஸ்ட் மாதிரி இல்ல. ஒரு ஆர்டர் மாதிரி இருக்கு.


ALP ஜோதிடர் :


எஸ் இட் இஸ் அ ஆர்டர். ஏன்னா எத்தனையோ புத்தகங்களை படிக்கிறீங்க. எத்தனையோ மனுஷங்களையும் படிச்சு இருக்கீங்க.


திரு . ராஜேஷ் சார்: 


இல்ல புஸ்தகங்களை விட மனிதர்களை படிச்சது தான் அதிகம். இல்ல தேடல் தான் காரணம். எனக்கு தேடல்தான். இப்ப நீங்க சொன்ன அனுபவங்கள் எல்லாம் நான் சொல்லுவேன்.  ஏதாவது ஒரு கமெண்ட் பாஸ் பண்ணும் போது எனக்கு மனசு கஷ்டமா இருக்கும். 


ALP ஜோதிடர் :


அதை நம்ம ஏங்க கண்டுக்கணும். நம்ம படிக்கிறோம் நம்ம எழுதுறோம். 


திரு .  ராஜேஷ் சார்: 


இல்ல நான் சொல்லுவேன், இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும் சொல்றதுக்கு. 


ALP ஜோதிடர் :


ஆனா நீங்க வந்து இத படிக்கணும். எங்களுக்காக ஒரு 15 நாள், நாளைக்கு வகுப்பு ஆரம்பிக்குது புது வகுப்பு. 4.30 - 6.30 கொஞ்சம் எங்களுக்காண்டி காலையில உட்கார்ந்து படிங்க. உங்களுக்கு எழுதறதுக்கு வேணா நான் வந்து ஹெல்ப் பண்றேன். எழுதி கொடுக்கிறேன். படிச்சிருங்க நீங்க. ஏன்னா நீங்க படிக்கணும். நீங்க படிச்சு சொல்லும்போது இது இன்னும், இது உண்மையானது கட்டாயம் எல்லாத்துக்கும் போய் சேரணும். எங்களுக்கு விளம்பரம் தேவையில்லை.  


இது நான் படிச்சதுனால, என்னோட பையனுக்கு எல்லாம் எட்டுக்கு எட்டுல உட்கார்ந்து இருக்கு. நான் என்ன செய்ய முடியும். அதாவது ஒவ்வொரு பேச்சு பார்வையே வந்து என்னடா இது, சூரிய திசை வேற போகுது. எப்படி இருக்கும் பாருங்க. கொதிக்குது அனலா தாங்க முடியல. ஆனா இத படிச்சதனால அப்படியே அமைதியா ஒண்ணுமே நடக்காத மாதிரி நாங்க மெதுவா கடந்து போறோம். அவனும் ஆட்டோமேட்டிக்கா நாங்க இருக்குறதுனால, 


திரு. ராஜேஷ் சார்: 


கண்ணதாசன் மாதிரி சொல்றீங்க. அமைதியான நதியினிலே ஓடம். 


ALP ஜோதிடர் :


We are undergoing   the problem day to day every minute. 


கர்மா – ALP முறையில்


திரு .  ராஜேஷ் சார்: 


அதானே கர்மா. அதானே உங்களுக்கு வாழ்க்கை. நாம சொல்வதை மகன் புரிந்து கொள்ளவில்லை. கணவன் புரிந்து கொள்ளவில்லை. அப்படிங்கறது தாங்க கர்மா. 


ALP ஜோதிடர் :


நீங்க கருமான்னு சொன்னதும் நான் ஒன்னு சொல்லிக்கலாமா? 

நீங்க ஜீவகர்மானு சொல்லி உங்களுக்கு ஒருத்தர் படம் பிடிச்சு காமிச்சதெல்லாம் சொல்லி இருந்தீங்க. ஆனா எங்களுடைய அட்சய லக்ன பத்ததிலயும் அத சொல்லுவாங்க.


வெறும் 1 ல இருந்து 12 நம்பர் இருந்தா போதுங்க. உங்களுடைய கர்மா என்னன்னு நான் இப்போ சொல்லிடுவேன். இன்னைக்கு நிகழ்கால கர்மால போகுதா, இறந்த கால கர்மால போறீங்களா,  எதிர்காலம் கருமால போறீங்களான்னு. 

1-4-7-10 எங்களுக்கு பிரசன்ட்.

 2-5-8-11 பாஸ்ட். 

3-6-9-12 ஃபியூச்சர். 

இன்னைக்கு என்ன நட்சத்திர புள்ளி அது என்னறது நாங்க வச்சு சொல்லிடுவோம்.


திரு . ராஜேஷ் சார்: 


என்னையா நீங்க நியூமராலஜில விளையாடுறீங்க.


ALP ஜோதிடர் :


எல்லாமே எங்களுக்கு நான் 1-12 குள்ள, எங்க சாஃப்ட்வேர் என்ன நினைச்சீங்க. எங்க சாப்ட்வேரை நீங்க பார்த்தீங்கன்னு வச்சுக்கோங்க நீங்க எங்கேயுமே உங்க கவனம் செதறவே செதறாது. இதையே அப்படியே இறுக்கமா பிடிச்சுக்குவீங்க. 


திரு . ராஜேஷ் சார்: 


இன்னைக்கு ரோகிணி நட்சத்திரம் நினைக்கிறேன். 


ALP ஜோதிடர் :


இன்னைக்கு அட்சய திருதியை. 


திரு . ராஜேஷ் சார்: 


அட்சய திருதியையா இந்த தங்கம் வாங்குகிறதா?


ALP ஜோதிடர் :


அதான் பாருங்க எப்படி மைண்ட்ல மத்த ஜோதிடர்கள் அப்படி பரப்பி வச்சிட்டாங்க. ஆனா ஃபேக்ட் என்னன்னா இன்னைக்கு நிறைய தானம் கொடுக்கணும். அப்படின்னு அந்த கான்செப்டே எங்க ஐயா எங்களுக்கு மாத்தி சொல்லி கொடுத்திருக்காங்க. இன்னிக்கு நாம தானம் கொடுக்கும் போது தானம் கொடுக்கிறது வளரும். யார் தானம் கொடுக்க முடியும்? நிறைய இருந்தா தானே கொடுக்க போறோம். நல்ல மனசு இருந்தா தான கொடுக்கப் போறோம். அதை இன்னைக்கு வளத்துக்கோங்க அப்படின்னு சொல்றாங்க. அதுவும் அட்சய லக்ன பத்ததியோட ஸ்பெஷாலிட்டி. 


நீங்க இந்த கர்மா தியரி மட்டும் நீங்க வந்து ஒரு நாள் நீங்க 15 நாள் வந்து உட்காருங்க. ஒரு நாள் தான் அது நடக்கும். 65 - 70 வயசு இருக்கிறவங்க எல்லாம் அப்படியே கண்ணீர் வடிச்சு அவங்க அப்படியே அவங்களுடைய நிலைய உணர்ந்து அப்படியே கதறுவாங்க. 


நான் எங்க அம்மா அப்பாவை சரியா நடத்தல. என் பிள்ளை கிட்ட நான் இப்படி நடந்துட்டேன். நான் தவறு செஞ்சிட்டேன். நான் என்ன உணர்ந்துட்டேன். நான் எங்க அம்மா அப்பா கிட்ட மனசார மன்னிப்பு கேட்கிறேன். எங்க அட்சய லக்ன பத்ததி இந்த இடத்துல சொல்றேன் ஒரு பரிகாரம் அப்படிங்கறது என்னன்னா, காசு பணம் எல்லாம் செலவு கிடையாதுங்க. “அம்மா அப்பா கிட்ட மன்னிப்பு கேட்கணும். அம்மா அப்பாக்கு நன்றி சொல்லணும்”. இதுதான் கான்செப்ட். 


இதுதான் பரிகாரமே. எங்களுக்கு என்ன ப்ராக்டிஸ்னா ஃபர்ஸ்ட் டேயே, எங்க அம்மா என் தாய் தமயந்தி என் தகப்பனார் காளிதாசனுக்கு நன்றி. இதுதான் எழுதுறோம். 108.. 108.. தடவை டெய்லி காலைல எந்திரிச்சு. 


திரு. ராஜேஷ் சார்: 


வாரியர் ரேஞ்சுக்கு போய்ட்டீங்க. 


ALP ஜோதிடர் :


அதை எழுதி முடிச்சுட்டு நீங்க பாருங்களேன் நமக்கு மனசு அப்படியே ஃப்ரீயா இருக்கும். 


திரு . ராஜேஷ் சார்: 


ஆமா லெட்டஸ்ல கூட பவர் இருக்கு. எழுத்து, எண்ணம், சொல் செயல் தானே. அது மூணுலயுமே மனம், வாக்கு, காயம். அது லெட்டர்ஸ்ல உயிர் இருக்கு. கரெக்ட்.


ALP ஜோதிடர் : 


அந்த அம்மா அப்பா கிட்ட மன்னிப்பு கேட்கும் போது அவங்க வந்து 


திரு .  ராஜேஷ் சார்:


அதே மாதிரி அவங்களும் நம்ம கிட்ட மன்னிப்பு  கேட்கணும்ல.


ALP ஜோதிடர் :


அது கேப்பாங்க. அவங்க கட்டாயம் கேப்பாங்க. அவங்க ஆசிர்வாதம் இருந்தாலே போதுமே. அவங்க ஆண்டவன் கிட்ட கேப்பாங்க. நம்ம கிட்ட கேக்க மாட்டாங்க. 


திரு . ராஜேஷ் சார்: 


அதுக்கு ஒரு கர்மா இருக்குல. 


ALP ஜோதிடர் :



அவங்க ஆண்டவன் கிட்ட கேப்பாங்க, நம்மகிட்ட கேக்க மாட்டாங்க. நமக்காக ஆண்டவன் கிட்ட கேப்பாங்க.


திரு . ராஜேஷ் சார்: 


அப்படியா? 


ALP ஜோதிடர் :


ஆண்டவன் கிட்ட கேப்பாங்க.


திரு . ராஜேஷ் சார்: 


மன்னிச்சு வருத்தப்படுவாங்கல்ல. நம்ம மகன கவனிக்காம போயிட்டோம். சாப்பாடு கொடுக்காம போயிட்டோம். தவறுகளை உணர்ந்துட்டோம். 


ரொம்ப ரொம்ப சந்தோஷம். வேற ஏதாவது விசேஷ செய்திகள்? ஆனா நீங்க ஒரு உண்மையான ஸ்டுடென்ட். ப்ளேட்டோ மாரி அரிஸ்டாட்டில் பிளேட்டோ மாதிரி. 


ALP ஜோதிடர் :


அதெல்லாம் பெரிய வார்த்தையா. ஆனா என்னுடைய ஹம்பல் ரெக்வெஸ்ட் நீங்க கட்டாயம் எங்களுடைய அட்சய லக்னப் பத்ததி படிக்கணும். நம்மளோடதெல்லாம் டெம்பரவரி தானே இது பெர்மனென்ட். 


திரு . ராஜேஷ் சார்: 


கண்டிப்பா. 


ALP ஜோதிடர் :


இது பெர்மனென்ட். கட்டம் பெர்மனென்ட். நான் மண்டைய போட்டா கூட எனக்கு அதுக்கு பிறகு கணக்கு வருதே. அதுதானே கர்மா. என் பிள்ளைகளுக்கு வருதே. ரொம்ப முக்கியமான விஷயம் ரொம்ப ஆழமான விஷயம். யாரும் வந்து இத மறுக்கவும் முடியாது, கடந்து போகவும் முடியாது, வேண்டாம்னு.  நாசாவே கண்டு பிடிச்சுருக்காங்களே இந்த கர்மாவை ஒண்ணு ரிமூவ் பண்ணு இல்ல. அத டிசெக்ட் பண்ணு. என்னன்னு பாருன்னு சொல்றாங்க. அதனால கட்டாயம் நீங்க எங்களுடைய தாழ்மையான வேண்டுகோள் எங்களோடத படிக்கணும். 


திரு . ராஜேஷ் சார்: 


கண்டிப்பாக, நிச்சயமாக. இவ்வளவு டைம்ல நீங்க ஆனா மெட்ராஸ்ல தான் இருக்கீங்க. பரவால்ல உங்களை சந்தித்த பாக்கியம் பெரிய பாக்கியம். அருமையான ஸ்டுடென்ட் நீங்க மூர்த்தி சாருக்கு. 


ALP ஜோதிடர் :


ரொம்ப நன்றிங்க. நான் எப்பயும் நிரந்தரமா ALP யோட மாணவியா இருக்கணுங்கிறது தான் என்னோட ஆசை. மாணவியாக கற்றுக்கொண்டே இருக்கணும். 


திரு .  ராஜேஷ் சார்: 


ரொம்ப சந்தோசம்.


Website: www.alpastrology.com 


Contact: 9786556156 / 9363035656







Comments