alp astrology

 பித்ரு தோஷம்  சார்ந்த கேள்விகளும் பதில்களும்- ALP ஜோதிடம்.




ALP ஜோதிடர் உமா வெங்கட்


ஆன்மீகம் தமிழ் அன்பர்களுக்கு வணக்கம். நம்ம நிறைய கேள்விகள் எல்லாருக்குமே இருக்கு. பித்ரு தோஷம் என்ன அப்படிங்கிறது

பித்ரு  தோஷம்னா என்னங்க?


நம்மளுடைய பித்ரு அப்படிங்கறது யாருன்னு பார்த்தீங்கன்னா உங்களுடைய தாத்தா பாட்டி. அவர்களுடைய முன்னோர்கள். ஏழு தலைமுறையில் உள்ளவங்க தான் பித்ருக்கள் அப்படின்னு சொல்லுவோம்


இந்த பித்ரு தோஷம் ஏன் வருகிறது?  


முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் அப்படிங்கறது நிறைய பேர் செய்ய விட்டிருப்பாங்க. அது அவங்களுடைய நேரம் இன்மை காரணமாக. அவங்களுடைய பொருளாதார நிலை அனுசரிச்சு அவங்களால செய்ய முடியாமல் இருந்திருக்கும்


அந்த இறந்த காலங்களில் கூட போய் பங்குபெறாதவங்க கூட நிறைய பேர் இருப்பாங்க. அவங்க ஒரு இடத்துலயும் பெற்றோர்கள் ஒரு இடத்துலயும் இருப்பாங்க. அப்போ இந்த காலகட்டங்களில் நிறைய பேர் அதைச் செய்ய முடியாத ஒரு சூழ்நிலை அப்படிங்கறது இருக்கு


அதே மாதிரி முன்னோர்களுக்கு இப்போ பித்ரு தோஷம் ஒரு பரிகாரம், ஒரு சிராத்தம் ஏதாவது குடுக்கணும் அப்படின்னா ஏழு தலைமுறைக்கு நம்ம அதை செய்யணும்னு சொல்லுவாங்க. குறைஞ்சது மூணு பேரோட தாத்தா பாட்டி , தாத்தா அவங்க அப்பா, அவங்களுடைய அப்பா அப்படிங்கற மூணு தலைமுறை பெயர்கள் ஆட்டி உங்க அப்பா சொல்லி நீங்க கேட்டிருப்பீங்க


ஆனா இந்த காலகட்டங்களில் அந்த வழிமுறைகள் அப்படிங்கிறது இல்ல.   இவர்கள் குடும்பத்தில தான் பித்ரு தோஷம் அப்படிங்கறது அதிகமாக இருக்கும். வருடத்துக்கு ஒரு முறை அவர்களுக்கு செய்யக்கூடிய சிரார்த்த முறைகள் செய்ய வேண்டிய கர்மா அப்படிங்கிறத கண்டிப்பாக செய்யணும் அப்படிங்கறது இருக்குது. நிறைய பேர் அதை செய்ய தவறிவிட்டாங்க


சரி , இதனால என்ன பலன் தரும்  பார்த்தீங்கன்னா, குழந்தை பிறப்புகள்ல அது உங்களுக்கு அழகான பித்ரு தோஷத்தை காமிச்சு கொடுக்கும் சொல்லலாம். சிலருக்கு தாமத குழந்தையாகவும். சிலருக்கு குழந்தை பிறந்து அவங்களுக்கு மனோபாவம் அப்படிங்கிறது கொஞ்சம் குன்றி இருக்கும். வளர்ச்சி இல்லாத குழந்தைகள். ஊனமுற்ற குழந்தைகள் அப்படிங்கறது இந்த இடத்துல உங்களுக்கு குறி காட்டும்னு சொல்லலாம்


இதெல்லாம் பித்ரு தோஷத்திற்கு அறிகுறியான கண்டிப்பாக அறிகுறி. சிலருக்கு குழந்தை கொடுக்காமலேயே அந்த ஒரு குறையை காண்பித்துக் கொடுக்கும். சிலருக்கு குழந்தையைக் கொடுத்துட்டு அதுல ஒரு குறை அப்படிங்கறத கொடுக்கும். அப்போ இந்த குறைகளை தீர்க்கக் கூடியது இந்த பித்ரு தோஷ வழிமுறைகள்ன்னு சொல்லலாம்


பித்ரு தோஷம் நீங்க வழிமுறைகள்


எங்களுக்கு இது எதுவுமே தெரியாது. நீங்க சொல்றீங்களே இது எப்படி செய்யணும் கேட்கிறவர்கள் நிறைய பேர் இருப்பீங்க. இந்த காலகட்டத்தில் வீட்ல யார் பெரியவங்க இருக்காங்களோ, அதாவது ஒரு குடும்பத்துல மூணு பேர் இருப்பாங்க. முன்னாடி பத்து பேர் இருந்தாங்க. அப்ப பத்து பேருக்குள்ளயுமே மூத்த ஆள் அப்படிங்கிறது கண்டிப்பாக இந்த பித்ரு தோஷ வழிமுறைகளை செய்யணும்


இப்ப மூத்தவங்க இல்லைங்க எங்க அண்ணா இல்ல. இப்ப கடைசியில உள்ளவங்க தான் இருக்கிறாங்க. அதுவும் ஆண் வாரிசாக இருக்கும்போது அந்த கடைசி ஆண் வாரிசு அப்படிங்கறது இந்த பித்ரு தோஷ வழிமுறைகள் அப்படிங்கறது பண்ணனும்.

சரி

எந்த காலகட்டத்தில் பண்ணலாம்

எப்படி பண்ணலாம்

அப்படிங்கற கேள்வி உங்க எல்லாருக்கும் இருக்கும். பித்ரு தோஷத்தை பொருத்தவரைக்கும் முதல்ல நாம செய்யக்கூடாது என்னன்னா தில ஹோமம் அப்படிங்கறது பண்ணனும்

தில ஹோமம் எங்க பண்றது


வீட்ல பண்ணக்கூடிய ஹோமம் அப்படிங்கறது கிடையாது. நீங்க ஒரு சுப நிகழ்வுக்காக ஒரு ஹோமம் பண்றீங்க அப்படின்னா அது வீட்ல வச்சே செய்யலாம். ஆனா பித்துருக்கள் கரை சேர்ப்பதற்காக செய்யக்கூடிய ஹோமம் அப்படிங்கறது திலக ஹோமம்


அது எந்த இடத்தில் எல்லாம் பண்ணலாம்னு பார்த்தீங்கன்னா, ராமேஸ்வரத்தில் தில ஹோமம் பண்ணுவாங்க. நீங்க நிறைய பேர் பார்த்திருப்பீங்க பித்ரு தோஷ நிவர்த்தி ஸ்தலம் எங்கன்னு கேட்டீங்கன்னா ராமேஸ்வரம். அந்த கடல் நீராடுதல் ரொம்ப சிறப்பு. அவங்களுக்கு காரியம் பண்ணிட்டு அந்த கடல்ல வந்து அவங்கள கொண்டு போய் சேர்க்கிறது அப்படிங்கிறது ரொம்ப பெருசு. அது எல்லாராலையுமே முடியுமான கண்டிப்பா முடியாதுன்னு சொல்லிக்கிறேன்


இத நீங்க எப்படி தெரிஞ்சுக்கலாம் அப்படின்னு நினைச்சீங்கன்னா உங்க குடும்பத்துல ஏதாவது ஒரு அழுத்தம் அப்படிங்கறது இருந்துட்டே இருக்கும். வருமானம் இருக்கும் சந்தோஷம் இருக்காது. சந்தோஷம் இருக்கும் வருமானம் இருக்காது


குழந்தைகள் வந்து என்ன பண்ணுவாங்க நல்லா வளர்வாங்க திடீர்னு பார்த்தீங்கன்னா அவங்களுக்கு மனசுக்கு பிடித்த திருமணம் அதற்காஸ்ட் அப்படிங்கறது பண்ணி போயிருவாங்க. அங்க உங்களுக்கு பித்ரு தோஷத்தை அழகாக எடுத்துக்காட்டுன்னு சொல்லலாம்


சிலருக்கு குழந்தை பிறக்காமலே அப்படிங்கறது குறிக்கும். சிலருக்கு குழந்தைகளுக்கு திருமணம் ஆகாமலே இருக்கும். என்னங்க எல்லாமே இருக்கு. அப்போ உங்க பிசினஸ் எப்படி இருக்குன்னு பாருங்க. அது சரியா அமையல அப்படின்னா அந்த குடும்பங்கள்ல பித்ரு தோஷம் கண்டிப்பாக இருக்குது அப்படின்னு அர்த்தம். கண்டிப்பாக பித்ரு தோஷத்துக்கு பரிகாரங்கள் அப்படிங்கிறது செய்யணும்


எந்த இடத்தில் செய்யலாம் ஆற்றங்கரை, கடல் தீரத்துல அப்படிங்கிறது பித்ரு தோஷ பரிகாரங்களுக்கு மிகச்சிறந்த ஸ்தலம்னு சொல்லலாம். நீங்க ராமேஸ்வரத்துக்கு போங்க அங்க திலக ஹோமம் செய்து அந்த பித்ரு தர்ப்பணம் அதாவது பித்ரு தர்ப்பணம் பண்ணிட்டு அவங்கள கரை சேர்க்கிறது கடல்ல போய் கரை சேருங்க

ஒரு வழி உங்களுக்கு காட்டும்

அவங்க ஆத்மா அந்த பகவானிடம் போயிட்டு நல்ல ஒரு வழி உங்களுக்கு காட்டும் அப்படிங்கிறது தான் உண்மை. அதே மாதிரி திருவெண்காடுன்னு சொல்லுவோம். திருவெண்காடு பித்ரு ஸ்தலம் அப்படிங்கிறதே சொல்லலாம். அதுக்கு ஸ்ரீவாஞ்சியம் மிகச்சிறந்த பித்ரு ஸ்தலமாகவே இயங்கப்படுகிறது. நம்ம பவானி கூடுதுறை உங்களுக்கு தெரியும். ஈரோட்டில் உள்ள பவானி கூடுதுறை அப்படிங்கறது பித்ரு ஸ்தலத்திற்கு மிக சிறந்த பரிகாரம்


இந்த ஆடி மாதங்களில் ஆடி அமாவாசைகளில் ஈரோடு திருப்பூர் மக்கள் வந்து அந்த பவானி ஆற்றங்கரையில் அதுவும் அந்த கூடல் சொல்லக்கூடிய சங்கமிக்கும் இடங்களில் பித்ரு பரிகாரங்கள் பண்றது ரொம்ப சிறப்பாக இருக்கும். அதே மாதிரி ஸ்ரீரங்கப்பட்டினம் இந்த இடமும் பித்ரு ஸ்தலமாகவே கருதப்படுகிறது


அங்க போயிட்டு பித்ருக்கு பரிகாரம் அப்படிங்கிறது பண்ணிட்டு வாங்க. இதை விட எல்லாமே சிறந்தது எங்கன்னு நான் சொல்லுவேன் அப்படின்னா திருவனந்தபுரத்தில அனந்த பத்மநாபன் வாழக்கூடிய இடத்தில திருவெல்லா அப்படின்னு சொல்லுவாங்க. அங்க பரசுராமருக்கு கோயில் நம்ம தமிழ்நாட்டுல ஒரே ஒரு கோயில் எங்க இருக்கு அப்படின்னா பரசுராம சேத்திரம் சொல்வாங்க. அந்த இடத்துல மட்டும் தான் இருக்கு. அந்த இடத்துல பித்ரு ஸ்தலம் பித்ரு காரியம் செய்யக்கூடிய ஒரு இடம் அப்படிங்கறத அங்கதான்


நிறைய நண்பர்கள் நம்ம தமிழ்நாட்டுல இருந்து அங்க வந்து பித்ரு பரிகாரம் அப்படிங்கிறது பண்ணிட்டு இருக்காங்க. அவங்களுக்கு ரொம்ப சிறப்பான பலனை கண்டிப்பாக கொடுக்கிறது. இந்த பித்ரு தோஷத்திற்கு நிவர்த்தி அப்படின்னு சொல்லலாம். சரி என்னைக்கு பண்ணலாம்? அப்படின்னு கேள்வி இருக்கும். இவ்வளவும் சொல்லிட்டீங்க என்னைக்கு பண்ணலாம் அப்படின்னா கிருஷ்ண பட்ச சனிக்கிழமை அப்படிங்கிறது போகிறது ரொம்ப சிறப்பா இருக்கும். அதே மாதிரி அமாவாசைகளில் ரொம்ப போறது சிறப்பா இருக்கும். அம்மாவாசை அன்னைக்கு பித்துரு தர்ப்பணம் பண்றது கிருஷ்ண பட்சத்தில் வர சனிக்கிழமை மிக சிறந்ததாக இருக்கும்

பரணி நட்சத்திரம்

அதே மாதிரி பரணி நட்சத்திரம் அன்னைக்கு இந்த பித்ரு தோஷ பரிகாரம் பண்றது ரொம்ப சிறப்பா இருக்குன்னு சொல்லலாம். யாருக்கெல்லாம் என்னுடைய குடும்பத்துல இப்படி பிரச்சனைகள் இருக்குதோ கண்டிப்பாக ஒரு முறை உங்க ஜாதகத்தை செக் பண்ணுங்க. செக் பண்ணவே வேண்டாம். நீங்களே உங்க மனசுக்கு பட்டது அப்படின்னா இந்த பித்ரு தோஷ நிவர்த்தி அப்படிங்கிறது உங்க குடும்பத்தோட சென்று அந்த கடல்ல அந்த ஆத்துல ஓடும் நதிகள்ல நீராடுவது மிக சிறந்த பலனை கொடுக்கும் அப்படின்னு சொல்லிக்கிறேன். அனைவருக்கும் வணக்கம் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.


Website: www.alpastrology.com 

Contact: 9786556156 / 9363035656


Comments