திருச்செந்தூரில் மடிப்பிச்சை எடுத்தால் குறைகளை நீக்கி வரங்களை அருளும் முருகன் - ALP ஜோதிடம்.
ALP ஜோதிடர் உமா வெங்கட்.
ஆன்மீகம் தமிழ் நண்பர்களுக்கு வணக்கம். நம்ம நிறைய ஜாதகங்கள் பார்த்திருக்கோம். திருமணம் ஆகாத ஜாதகங்கள் பார்த்தீங்கன்னா நிறைய திருமண தடை, திருமண தாமதம் அப்படிங்கற கவலை பெற்றோருக்கு இருக்கும்.
ஏன் இவங்களுக்கு திருமணம் நடக்கல அப்படின்னு கொஞ்சம் பாருங்க.
அவங்களுடைய ஜாதகத்துல அவங்களுடைய அட்சய லக்னம் இப்ப என்னவோ அந்த ஜாதகத்தில் அந்த பெண்ணிற்கு உண்டான களத்திரத்தின் எதிர்பார்ப்பு கொஞ்சம் அதிகமாக இருக்கும்.
இல்லனா அவங்களுடைய களத்திர ஸ்தானத்துல அந்த ஜாதகத்திற்கு ஆகாத அதிபதிகள்னு சொல்லுவாங்க அழுத்தம் தரக்கூடிய கிரகங்கள் அங்கு அமர்ந்திருப்பாங்க. அதனால தான் இவங்களுக்கு திருமண தாமதம் அப்படிங்கறது இருக்கும்.
இல்லங்க எங்களுடைய ஜாதகம் சுத்த ஜாதகம். நம்ம பாரம்பரியத்துல பாப்போம். சுத்த ஜாதகமா இருக்கு ஏன் திருமணம் அமையல அப்படிங்கற கேள்விகள் எல்லாருக்கும் இருக்கும்.
திருமண தடைக்கு காரணம் :
நீங்க இப்போ உங்களுடைய அட்சய லக்னத்திற்கு உங்களுடைய களஸ்திர ஸ்தானத்தில் யாரு இருக்காங்கன்னு பாருங்க. இதனால தான் திருமண தடை அங்க குறி காட்டுதா அப்படின்னு செக் பண்ணிக்கோங்க.
அங்க பாத்தீங்கன்னா நூறு சதவீதம் அப்படிதான் இருக்கும். அதே மாதிரி பிரச்சனைக்குரிய கிரகம் அப்படிங்கற ஒரு கிரகமும் தீராத அழுத்தம் தரக்கூடிய பாவகமும் உங்களுக்கு களத்திர ஸ்தானத்துல அமர்ந்திருக்கும். இதுதான் உங்க திருமண தாமதத்திற்கு முதல் காரணம்னு சொல்லலாம்.
சரி வேற என்ன பிரச்சனைகள் இருக்கும் அப்படின்னு பாத்தீங்கன்னா, உங்க ஜாதகத்தில் களத்திர ஸ்தானத்துல யாரு உட்கார்ந்து இருப்பாங்கன்னா உங்க லக்னத்திற்கு நாலாம் அதிபதியும் போய் உட்கார்ந்து இருப்பாங்க.
அப்போ உங்க அம்மா திருமணத்திற்கு பார்க்கும்போது இந்த திருமணம் ஆகாத உங்களுடைய ஜாதகத்தில் நாலாம் அதிபதின்னு சொல்லக்கூடிய கிரகம் தாய் ஸ்தானத்தில் அமர்ந்தா எனக்கு அம்மா மாதிரியே பொண்ணு வேணும் பையன் வேணும் அப்பா மாதிரியே பையன் வேணும் பொண்ணு வேணும் அப்படிங்கிறது நிறைய பேர் ஆசைப்படுவாங்க.
அது எப்படி நடக்கும்?
யோசிச்சு பாருங்க. அப்போ இதனாலேயே பல திருமணங்கள் தடுக்கப்படுகிறது. எங்க அம்மா பார்த்து சொன்னா போதும் நான் அந்தப் பையனை கல்யாணம் பண்ணிக்கிறேன்.
அம்மாவுக்கு தன் மகளைப் பற்றி நன்றாகவே தெரியும். இந்த மாதிரி என் பொண்ணு கொஞ்சம் இப்படித்தான் இருப்பாங்க. அவங்களுக்கு இந்த பையன் ஒத்து வரணும் அப்படிங்கற அமைப்பு. இல்லனா இந்த பெண் கொஞ்சம் அதிகமா பேசுது என் பெண் கொஞ்சம் சோம்பேறி அவங்களுக்கு ஒத்துப் போகிற தன்மை அப்படிங்கறது வேணும். இதனாலேயே சில திருமணங்கள் அப்படிங்கறது தடைபடுது.
அப்படி எல்லாம் பார்க்காதீங்க. அதாவது ஜாதக அமைப்பு எப்படி இருந்தாலும் சரி, களத்திர ஸ்தானம் நல்லா இருக்கா? அந்த பையனோட வருமானம் குடும்பம் நல்லா இருக்கா? பாருங்க. திருமணத்தை பண்ணி குடுங்க விரைவாக திருமணம் நடக்கக்கூடிய காரணம் இதுவாகவே அமையனும் அப்படின்னு சொல்லிக்கிறேன்.
சில ஜாதகங்கள்ல அந்த அமைப்பு கொஞ்சம் கம்மியா தான் இருக்கு. ஏன்னா திருமண தடை அப்படிங்கறது இருக்கும்.
சரி இந்த திருமணம் தாமதமாகுது. உண்மையிலேயே அங்க நடக்கல. நாங்க எந்த ஒரு பலனையும் எதிர்பார்க்கல. ஏன் தாமதமாகுதுன்னு? பெற்றோர்கள் கேட்டீங்க அப்படின்னா அதற்கு உண்மையிலேயே ஜாதகமாக தான் காரணம் இருக்கும்.
அப்போ அதற்கு பரிகாரம் ஒன்னு இருக்குதானா? இருக்குது.
திருமண தடைக்கான தீர்வு :
இப்போ திருமணத்திற்கு என்று பார்த்தீங்கன்னா முருகன் வழிபாடு செய்வது ரொம்ப சிறப்புன்னு சொல்லுவேன். ஏன்னா உங்களுக்கு தெரியும். முருகன் வந்து வள்ளியை தெய்வானை கல்யாணம் செய்தாங்க. சூரசம்கார வதம் கழிந்த பின்னு சொல்லுவோம்.
சஷ்டி விரத முறை :
அப்போ சஷ்டி காலங்களில் ஆறு நாள் விரதம் இருந்து, நம்ம தெய்வானை அம்மனை வந்து மணந்தவர் யாருன்னா கேட்டீங்கன்னா முருகன் தான். அப்போ இதே மாதிரி நீங்களும் சஷ்டி விரதம் இருக்க சொல்லுங்க உங்க பெண்களை உங்க பையங்களை. கண்டிப்பாக அவர்களுக்கு திருமண வாய்ப்பு அப்படிங்கறது ரொம்ப எளிமையா கிடைக்கும்னு சொல்லலாம்.
சரி இது எப்படி இருக்கிறது? அப்படின்னா ஒரு நேரம் அதாவது மத்தியான நேரம் புளி இல்லாதது, புளி சேர்க்காமல் சாப்பிடுவது அப்படின்னு ஒரு விரத முறை இருக்கிறது. இல்லைனா சுத்த விரதமாக இருந்து சாய்ந்த நேரம் அப்புறம் சாப்பிடறவங்க அப்படின்னு இருப்பாங்க. இந்த மாதிரி சஷ்டி விரதம் இருந்து நீங்க திருமணத்திற்கு பாருங்க. அது உங்களுக்கு நல்ல அமைப்பாவே அமையும். ரொம்ப எளிமையாகவே திருமணம் நடக்கும்னு சொல்லலாம்.
குழந்தை பாக்கியம் :
நம்ம பெரியவங்க சொல்லுவாங்க, “சட்டியில இருந்தா தான் அகப்பைல வரும்னு” சொல்லுவாங்க. அது என்ன அப்படின்னு பாத்தீங்கன்னா சிலருக்கு வந்து குழந்தை பிறக்காத ஒரு தன்மை அப்படிங்கறது இங்க கொடுக்கும். அப்போ இந்த குழந்தை பிறக்காதவங்களுக்கு இந்த சஷ்டி விரதம் இருப்பது ரொம்ப சிறந்த பரிகாரம்னு சொல்லலாம்.
சட்டின்னு சொல்றது அவங்களுடைய கர்ப்பப்பை சொல்லுவாங்க. அந்த கருப்பையை, விரதம் இருப்பது, சுத்தம் செய்வது, என்பது அப்ப இந்த சஷ்டி விரதத்தில் இருந்தாங்க அப்படின்னா இவங்களுக்கு கருப்பையில் வந்து குழந்தை அப்படிங்கற ஒரு பாக்கியம் அந்த முருகனே கரு உருவாகி அப்படின்னு சொல்லுவோம்.
உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய்…
அப்போ அந்த கருவே உயிராகி வரக்கூடிய ஒரு தன்மை அப்படிங்கறது இந்த முருகப்பெருமானுக்கு மட்டுமே உள்ளது.
அப்போ நீங்க யோசிச்சு பாருங்க யாருக்கெல்லாம் குழந்தை பிறப்பு அப்படிங்கிறது இல்லையோ, கண்டிப்பாக நீங்க இந்த சஷ்டி விரதம் இருப்பது மிகச்சிறந்த பலனை கொடுக்கும் அப்படிங்கறத சொல்லலாம். சிலர் திருச்செந்தூருக்குள்ள வந்து ஒரு விசேஷமானது என்னன்னா சஷ்டி விரதம் இருப்பாங்க. இந்த கந்த சஷ்டி காலங்களில் ஆறு நாள் விரதம் இருப்பது அப்படிங்கறது இருப்பாங்க.
அதே மாதிரி அங்க மண் சோறு சாப்பிடுவது அப்படின்னு சாப்பிடுவாங்க. அங்க ரொம்ப ரொம்ப விசேஷமான ஒன்னு. குழந்தை பிறக்காதவங்களுக்கு இந்த மண் சோறு சாப்பிடுவது அப்படிங்கறது அவங்களுக்கு ஒரு நல்ல பலனை கொடுக்கும்.
அப்ப திருச்செந்தூர் கோவில் சென்று அங்க போயிட்டு மண் சோறு சாப்பிடுவது அப்படிங்கறது நல்லா இருக்கும்.
அதே மாதிரி கோயிலுக்கு போறது அப்படிங்கறது தானம் வாங்கிட்டு பிச்சை எடுத்துட்டு இப்ப நம்ம நிறைய பேர் பார்ப்போம். ஒரு கோவிலுக்கு போறோம் அப்படின்னு சொல்லிட்டு மடிப் பிச்சை வாங்குவாங்க. அந்தக் குழந்தை உருவாகுவதற்கு உண்டான மடிப்பிச்சை யார் ஒரு பெண் தன்னுடைய முந்தானை எடுத்து படிப்பிச்சு வாங்குறார்களோ அவர்களுக்கு கரு உருவாகுவதற்கு முதல் காரணமாக அது அமையும் என்று சொல்லலாம்.
அப்போ அந்த மடிப் பிச்சை வாங்கி அந்த இடத்துல இருந்து கோயிலுக்கு போயிட்டு அங்க சுவாமிக்கு தட்சணை செய்வது அப்படிங்கறது மிக சிறந்த பரிகாரம்.
ஆத்மாவை சுத்தம் செய்யக்கூடியது மடிப்பிச்சை :
அவங்களுக்குள்ள தன்மைகள், அவங்க மனசுல என்ன ஒரு எண்ணம் இருந்தாலுமே அவ்வளவு அந்த பிச்சைங்கறது எடுக்கும் போது அதுவும் கடவுளுக்காக எடுக்கக்கூடியது நமக்காக கிடையாது.
உங்களுடைய உடலை உங்களுடைய ஆத்மாவை சுத்தம் செய்யக்கூடியது இந்த மடிப்பிச்சை. அத நீங்க பண்ணுங்க. கண்டிப்பாக அதற்கு உண்டான பலனை முருகப்பெருமான் கொடுப்பாங்க அப்படின்னு சொல்லலாம்.
அப்ப திருமண தடை திருமணம் யாருக்கெல்லாம் திருமணம் ஆகலையோ, அவர்களும் திருச்சந்தூரில் சென்று வழிபடுவது மிகப் சிறந்த பலனை கொடுக்கும். அது குரு ஸ்தலம் என்று சொல்வார்கள். அப்போ அந்த குரு அருள் உங்களுக்கு கிடைக்கணும் அப்படின்னா கண்டிப்பாக திருச்செந்தூர் சென்று வழிபடுவது.
அதே மாதிரி குழந்தை பிறப்பு இல்லாதவர்களுக்கு சஷ்டி விரதமும், பிளஸ் குழந்தைக்கான மடிப் பிச்சை வாங்குதல் அதே மாதிரி ரொம்ப சிறந்த பலனை தரும் னு சொல்லலாம்.
இந்த திருமணம் ஆகாத உங்களுக்கு நம்ம திருச்செந்தூரில் வள்ளி தெய்வானை காண திருமண கோலம் அப்படிங்கறத அங்க நடக்கும். அந்த திருமண வைபவத்தில் கலந்து கொண்டு வந்தாலே மிகச்சிறந்த பலனை கொடுக்கும். அது எந்த நேரத்தில் நடக்கும் அப்படிங்கறத தெரிஞ்சுகொண்டு அந்த நேரத்தில் போய் சுவாமி பார்த்தாலே ரொம்ப அழகான பலனை அந்த முருகன் கண்டிப்பாக கொடுப்பார் அப்படிங்கறது தான் உண்மை.
தொடர்ந்து நம்மளுடைய ஆன்மீக தமிழ் நண்பர்களுக்கு நிறைய பதிவுகள் அப்படிங்கறது கொடுக்கலாம்.
நன்றி.
Website: www.alpastrology.com
Contact: 9786556156 / 9363035656

Comments
Post a Comment