தீராத கடனும் தீரும்
இது மட்டும் செய்யுங்க - ALP ஜோதிடம்.
ALP ஜோதிடர் உமா வெங்கட்.
“குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மஹேஸ்வரஹ
குரு சாக்ஷாத் பரப்ரம்ம
தஸ்மை ஸ்ரீ குரவே நம.”
என்னுடைய குருநாதர் திரு. பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்களுக்கு என்னுடைய வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைவருக்கும் வணக்கம். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
எதை செய்தால் எது வந்து தெளிவாகும்? அப்படிங்கறது. இப்ப நம்ம பெரியவங்க சொல்லுவாங்க. என்னத்த தின்னா பித்தம் தெளியும்? அப்படிம்பாங்க கரெக்ட்டுங்களா அந்த மாதிரிதான். இப்ப எல்லாருக்குமே நிறைய பிரச்சனைகள் அப்படிங்கறது இருந்து வந்துட்டு தான் இருக்கு.
இப்ப நம்ம எத பத்தி பேச போறோம்னா, கடன் தீருவதற்கும், வருமானம் வரதுக்கும் உண்டான வழிகள் அப்படிங்கறத தான் நாம இப்போ பாக்கபோறோம்.
கடன் :
கடன் பாத்தீங்கன்னா எல்லாருக்கும் இருக்கும். கடன் இல்லாத மனுசங்க யாருமே கிடையாது. சிலருக்கு பெருங்கடனாக இருக்கும். சிலருக்கு சிறு கடனாக இருக்கும். அப்போ அவங்களுடைய கடனுக்கு உண்டான சுமை அந்த பெரும் சுமை அப்படிங்கறது எப்படி இறக்கி வைக்கணும். அதற்கு நம்மளால முடிஞ்சது என்ன எல்லாம் பண்ணலாம் அப்படிங்கறது இப்ப பாக்க போறோம்.
எப்போதுமே பெரியவங்க சொல்லுவாங்க தான் பாதி தெய்வம் பாதி அப்படின்னு. அப்போ நீங்க உங்களால முடிஞ்சத செய்யுங்க அந்த தெய்வம் அவர்களால் முடிந்ததை உங்களுக்கு ஒரு வழி காட்டுவாங்க. அப்படிங்கறது தான் உண்மை.
இப்போ நம்ம என்ன பண்ணலாம்?
இப்போ கடன் வாங்கிட்டீங்க. சிலர் வீட்டுக்காக வாங்கி இருப்பீங்க. வண்டிக்காக வாங்கி இருப்பீங்க. சிலர் மருத்துவமனை செலவுக்காக வாங்கி இருப்பீங்க. சிலர் குழந்தைகளுக்காக, சிலர் குழந்தைகளோட படிப்பிற்காக, சிலர் வேலைக்காக அதாவது என் குழந்தைக்கு இந்த வேலை கிடைக்கணும் இதற்காக நான் கடன் வாங்கினேன். அதுல சிறு தொகை அதில் அடைக்கணும் என்பதற்காகவே.
சில குழந்தைகள் மருத்துவக் கல்வி அப்படிங்கிறது படிப்பாங்க, அவங்களுக்காக கடன் வாங்கி இருப்பாங்க. அப்ப நிறைய கடன் எப்படி வருதுன்னு தெரியாது ஆனா வந்துரும். சரி அது எப்படி போக்குவது? இப்ப கடன் வாங்கிட்டோம். அதற்கு உண்டான வருமானம் அப்படிங்கறது உங்களுக்கு வேணும்.
கடனும், வருமானமும் :
அப்போ வருமானம் தன ஆகர்ஷம் சொல்வோம். அந்த தன வரவு பண வரவு. பணம் எப்படி எல்லாம் வரும்? கடன் அடையனும் எப்படி எல்லாம் அடையும்? அப்படிங்கறது.
சிறப்பு கோயில்கள் :
சரி கடனுக்காக இப்ப எந்தெந்த கோயில்கள் எல்லாம் போகலாம் அப்படின்னு பாத்தீங்கன்னா, ரொம்ப சிறப்பு அப்படிங்கிறது சரபேஸ்வரர் கோயில். கும்பகோணத்தில் உள்ள சரபேஸ்வரர் கோவிலுக்கு சென்று வருவது உங்களுடைய தீராத கடனை தீர்க்கக்கூடிய ஒரு காலமாகவே அமையும் அப்படிங்கறது சொல்லலாம்.
ஏன்னா அந்த சரபேஸ்வரர் சன்னதியில் நீங்க போயிட்டு ஆத்மார்த்தமா ஒரு மூணு நமஸ்காரம் வெளியில் நின்னுட்டு. கொடிமரம் இருந்தது அப்படின்னா இல்ல அப்படின்னா சுவாமி சன்னதில மூணு நமஸ்காரம் பண்ணி எந்திரிச்சுட்டு வாங்க. சுவாமி கிட்ட உங்களோட வேண்டுதல வைங்க.
இப்போ கடன் இருக்கு அப்படின்னா எப்படி குறையா சொல்வீங்க. அதே மாதிரி பகவானிடம் பேசுங்க. என்னுடைய கடன் அடைச்சிட்டு அதற்குண்டான வழிமுறைகளை அந்த கடனை அடைப்பதற்கு வழிமுறைகளை பண்ணி தாங்க அப்படிங்கறத அந்த பகவான்டயே பேசுங்க. கண்டிப்பாக அவர் உங்களுக்கு அருள் கொடுப்பார் அப்படிங்கிறது தான் உண்மை.
அப்போ கும்பகோணத்தில் உள்ள சரபேஸ்வரர் கோயிலுக்கு சென்று வாருங்கள். உங்களுடைய கடன் அடைப்பதற்கு பெரிய ஒரு தீர்வாகவே அமையும் அப்படிங்கறது சொல்லலாம்.
வீட்டில் இருந்தே என்னெல்லாம் பரிகாரங்கள் செய்யலாம் :
சொல்ல முடியுமா? என்னால அது செய்ய முடியும். ஏன்னா எனக்கு கோயிலுக்கு போக முடியாத ஒரு நிலைமை இருக்குது. எப்போதும் போக முடியாது தூரமாக இருக்கிறது. யாராவது துணை வேணும்னு நினைக்கிறவங்க, நீங்க என்ன பண்ணனும் அப்படின்னா காலையில ஆறு மணியிலிருந்து ஏழு மணி வரைக்கும் பச்சை பயறு எடுத்துக்கோங்க. பச்சை பயிர்ல பாயாசம் பண்ணுங்க. பாயாசம் பண்ணி அதை நெய்வேத்தியம் சுவாமிக்கு பண்ணுங்க. நெய்வேத்தியம் பண்ணிட்டு அதை பசு மாட்டுக்கு தானமாக குடுங்க உங்களுடைய கடன் அப்படிங்கறது அடக்கக்கூடிய ஒரு எளிமையான பரிகாரம் அப்படின்னு சொல்லலாம்.
பச்சை பயறுல மண்ட வெல்லம் போட்டு தேங்காய் போட்டு ஏலக்காய் போட்டு நெய் விட்டு பாயாசம் பண்ணுங்க.
பாயாசம் பண்ணி பசு மாட்டிற்கு தானம் குடுங்க. தானம் கொடுத்துட்டு நீங்க வேண்டிக்கோங்க. யார்ட வேண்டிக்கணும் அப்படின்னா முப்பத்து முக்கோடி தேவர்கள். பசுமாட்டில சுவாமி பகவான் எங்க இருப்பாங்க அப்படின்னு தெரியும். மகாலட்சுமி எங்க அமர்ந்திருப்பாங்க அப்படின்னு தெரியும். பசு மாட்டின் பின்பாகத்தில் தான் மகாலட்சுமி அப்படிங்கறவங்க அமர்ந்திருப்பாங்க. அந்த இடத்துல நின்னு ஒரு மஞ்சள் குங்குமம் வைத்து, பொட்டு வச்சு முதலில் தண்ணீர் விட்டு அலம்பி அபிஷேகம் பண்ணுங்க.
அபிஷேகம் பண்ணிட்டு இந்தப் பாயாசத்தை பகவானுக்கு கொடுத்துட்டு கோமாதாவிற்கு கொடுத்துட்டு. நீங்க முப்பத்து முக்கோடி தேவர்களையும் நினைச்சுட்டு உங்களோட வேண்டுதலை அங்க வைங்க.
என்னுடைய கடன் தீரனும். அதே மாதிரி எனக்கு பணம் வரவிற்கு ஒரு வழி காட்டுங்கள் அப்படிங்கறது. அவங்க வந்து கோமாதா. அட்சய பாத்திரமாக கண்டிப்பாக உங்களுக்கு அந்த இடத்துல வழி காட்டுவாங்க அப்படிங்கறது தான் உண்மை. நிறைய பேருக்கு இந்த எளிமையான பரிகாரம் அப்படிங்கிறது கை கொடுத்திருக்கு அப்படிங்கறது தான் உண்மை. நீங்களும் அதை செய்து பாருங்கள். இத எந்த லக்னக்காரங்க அப்படின்னு இல்லை எல்லாருமே செய்யலாம் அப்படிங்கிறது தான் உண்மை.
முருகன் வழிபாடு:
அதே மாதிரி முருகன் வழிபாடு மிகச் சிறந்த பரிகாரம் னு சொல்லலாம். ஏன்னா உங்களுக்கு முருகப்பெருமான் அந்தக் கடனை அடைக்கிறதுக்கு மிகப்பெரிய ஒரு காரணியாக இருப்பார். அவங்க வந்து ரொம்ப பெரிய அருள் கொடுப்பார் அப்படின்னு சொல்லலாம்.
முருகன் வழிபாடு எப்படி பண்ணலாம்?
செவ்வாய்க்கிழமைல மாலை நேரம் ஆறு மணியிலிருந்து ஏழு மணி வரைக்கும். நெய் தீபம் ஏற்றி முருகன் வழிபாடு பண்ணிட்டு வாங்க. மிகச் சிறந்த பலனை இந்த முருகன் உங்களுக்கு கொடுப்பார். உங்களுக்கு வரவிருக்கும், நீங்க சம்பாதிப்பீங்க ஆனா அந்த சம்பாத்தியம் உங்களுக்கு காணாது. கடன் அடைவதற்கு அது ஒரு நிவர்த்தி ஆகாது. ஒரு பெரும் கடனை அவர் கொடுப்பார் உங்களுடைய வருமானத்தை அடைக்க கூடிய பெருங்கடனுக்கு உண்டான ஒரு பிரச்சனையை அவர் தீர்த்து கொடுப்பார் அப்படின்னு சொல்லலாம்.
அதை நீங்க பண்ணிட்டு வாங்க அப்படின்னு சொல்லலாம். அப்போ செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியிலிருந்து ஏழு மணி வரைக்கும். ஒரு மணி நேரம் அப்படிங்கறது நெய் தீபம் அப்படிங்கறது போடுங்க. 7 அகல் விளக்குல போடுங்க. ரொம்ப நல்லா இருக்கும். தொடர்ந்து பண்ணிட்டு வாங்க உங்களுடைய கடன் அப்படிங்கறது கண்டிப்பாக அடைபடும்.
அந்த முருகனே நீங்க சோம்பேறியா ஓடிட்டு இருந்தீங்ககன்னா, உங்களுக்கு நல்ல ஒரு தீர்வை அந்த முருகன் தருவார் அப்படிங்கறது சொல்லலாம்.
சரி இன்னும் என்னெல்லாம் பரிகாரம் இருக்கு? சொன்னீங்கன்னா அடுத்து ஒரு பரிகாரம் அப்படிங்கறது சொல்லுவேன். நம்ம பச்சைக் கற்பூரம்னு சொல்லுவோம். அந்த பச்சைக் கற்பூரம் எடுத்துக்கோங்க. வீட்ல தீபாரனை பண்றதுக்கு அதை நீங்க ஏத்தி வையுங்க. உங்க வீட்ல உள்ள சுற்றுப்புற சூழ்நிலைகள் அப்படிங்கறது இந்த பச்சை கற்பூரம் அப்படிங்கிறது தீர்க்கும். சரி இந்த பச்சை கற்பூரம் என்ன செய்யும் பார்த்தீங்கன்னா, நீங்க ஏலக்காய் எடுத்துக்கோங்க ஒரு பச்சை கற்பூரம், தினமும் ஒரு மூணு ஏலக்காய் இது யார் சொன்ன பரிகாரம்னா.
பெரியவாளோட வாக்கு:
நம்ம மகா பெரியவா சொன்ன பரிகாரம். மகா பெரியவாவ நிறைய பேர் பார்க்க வருவாங்க. பார்க்க வரும்போது எனக்கு வறுமை, கடன் பிரச்சனை, வருமானம் இல்லாம போராத குறை, ஏழ்மை நிறைய அப்படிங்கற குறைய வந்து எல்லாரும் சொல்லிட்டு இருப்பாங்கலாம். அப்ப பெரியவா என்ன பண்ணாங்களாம் டெய்லி மூணு ஏலக்காய் எடுத்துக்கோங்க, அந்த ஏலக்காய் எடுத்து அதை உங்க கையில வச்சு வேண்டுதலா நீங்க வைங்க. கடன் அடைப்பதற்கு உண்டான வருமானத்தை தாங்க அப்படின்னு வேண்டிக்கோங்க ஒரு டப்பால போட்டுக்கோங்க. ஒரு டப்பால அந்த ஏலக்காய் போட்டு அடைச்சு வச்சுக்கோங்க. 11 நாள் அப்படிங்கறது இந்த மூணு ஏலக்காய் வீதம் உங்களோட வேண்டுதல வச்சி சுவாமி முன்னாடி ஒரு டப்பால போட்டு அடைச்சிருங்க. அதுக்கப்புறம் அந்த ஏலக்காய் எடுத்து 11 நாள் கழித்து அந்த 33 ஏலக்காய் + பச்சை கற்பூரத்தை எடுத்து ஒரு பச்சை துணியில் சுத்தி நீங்க பணம் வைக்கும் இடத்தில அதை வைங்க.
வைத்து 41 நாள் கழித்து அந்த பச்சை கற்பூரம் அந்த ஏலக்காய் அந்தப் பச்சைதுணி இந்த மூணையுமே எடுத்து ஓடும் நதியில விடுங்க.
இதத்தொடர்ந்து பண்ணிட்டு வந்தீங்கன்னா உங்க பண வரவும் உங்களுடைய கடன் தீருவதற்கும் ஒரு மிகச்சிறந்த பரிகாரமாக அமையும் அப்படிங்கறது பெரியவங்களோட வாக்கு பெரியவளோட வாக்கு. அப்ப நம்மிடம் பெரியவர்கள் எல்லாரும் சொல்லுவாங்க பெரியவா சொன்னா, பெருமாள் சொன்ன மாதிரின்னு சொல்லுவாங்க. அப்போ அந்த பெரியவா வந்து உங்களுடைய கடன் தீருவதற்கு உண்டான அமைப்பு சொல்லி இருக்காங்க. தொடர்ந்து செய்யுங்க.
அனைவருக்கும் வணக்கம்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
Website: www.alpastrology.com
Contact: 9786556156 / 9363035656

Comments
Post a Comment